(Reading time: 5 - 9 minutes)
Sirikkum Rangoli
Sirikkum Rangoli

  

"அவங்களுக்கு அது எவ்வளவு காஸ்ட்லின்னு தெரியாது. அதும் இல்லாம காண்டஸ்ட்க்காக ஆபர் கொடுத்திருந்தாங்க."

  

"அதே தான் அக்ஷரா. தெரியாததால அதிகமா செலவு செய்துட்டாங்க. இப்போ நீ தெரிஞ்சே ஒருத்தனுக்கு கிடைக்க வேண்டிய அரிய வாய்ப்பை அழிக்கப் பார்க்குற?"

  

"ஜாக்ருதியை பார்க்க நான் போகணும்னு கிடையாது விவேக். ஆதி மட்டும் தனியா போனாலே போதும். எங்க டீமை யாராவது ரெப்ரசன்ட் செய்யனும், அவ்வளவு தான்!"

  

"அவன் அப்படி போறவனா இருந்தா எதுக்கு அக்காவும், தம்பியும் உனக்கும் எனக்கும் போன் போட்டுட்டு இருக்காங்க? நீ வந்தா மட்டும் தான் ஜாக்ருதிக்கு காட்ட ப்ரோட்டோடைப்பே செய்வேன்னு ஆதித்யா அடம் பிடிக்கிறானாம். அவன் அக்காவும் அவன் சொல்றது சரின்னு சொல்றாங்க!"

  

"இதுக்கு நான் என்ன செய்ய முடியும்? அவனுக்கு வாய்ப்பு வேண்டாம்னா போய் தொலையட்டும்."

  

"பாவம் அக்ஷரா ஆதித்யா. அவன் கிட்ட நம்ம கிட்ட இருக்க மாதிரி பணம் இல்லை. இந்த வாய்ப்பை மிஸ் செய்தால் அவனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப கஷ்டம்."

  

"அதை அவன் யோசிச்சிருக்கனும்."

  

"யோசிக்கலை, தப்பு செய்துட்டான். உனக்கு இப்போ யோசிக்க சான்ஸ் இருக்கு. நீயும் அவனை மாதிரி தப்பு செய்யாதே. இது ஆதிக்கு மட்டும் நல்ல வாய்ப்பு இல்லை. உனக்கும் கூட தான்."

  

"எனக்கு புரியலை விவேக். இதுல உனக்கு என்ன இத்தனை இன்ட்ரஸ்ட்? நியூயார்க்ல இருந்து அட்லான்டா வந்து என் கிட்ட பேசிட்டு இருக்க?"

  

"எனக்கு வேலை இருந்தது அக்ஷரா, அதுக்காக வந்தேன். அப்படியே உன் கிட்டப் பேசினேன். நீ

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.