Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 21 - 42 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Ni kannanal nan imaiyaven
Pin It

தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 09 - சசிரேகா

இன்று இரவு சக்தியிடம் சாந்தி முகூர்த்தம் என்று எதுவும் சொல்லவில்லை, அவள் இயல்பாக இருந்தாள், கல்யாண சடங்கு போல இப்போதும் ஏதோ சடங்குகள் நடக்கப் போகிறது என நினைத்தாள். ஜீவாவோ சீக்கிரமாகவே சாப்பிட்டுவிட்டு தனது அறையை அவனே பூக்களாலும் மலர் தோரணங்களாலும் அலங்காரம் செய்து வைத்துவிட்டு தான் செய்த அலங்காரத்தை பார்த்து அவனுக்கு அவனே பாராட்டிக் கொண்டு நேரத்தைப் பார்த்து

  

”சக்தி ஏன் இன்னும் வரலை, இந்த அம்மா என்னதான் செய்றாங்க, நேரம் வேற ஓடிக்கிட்டே இருக்கு, சக்தி வேற புதுப் பொண்ணு அவள் வந்ததும் அவளை உட்காரவைச்சி முதல்ல பேசி பழகனும், புரிய வைக்கனும், அப்புறம்தான் வாழத் தொடங்கனும், அதுக்கெல்லாம் நிறைய நேரம் தேவைப்படுமே, இப்ப சக்தி வந்தாதானே சரியாயிருக்கும் என்ன செய்யலாம், நாமளே போய் அவளை கூட்டிட்டு வரலாமா வேணாம் அது அவ்ளோ நல்லாயிருக்காது, அவளே வரட்டும் பார்த்துக்கலாம்”

  

என குட்டிப் போட்ட பூனை போல அறைக்குள் நடந்தபடியே இருந்தான், நேரம் சென்றதே தவிர யாரும் வந்தபாடில்லை அவனுக்கு பொறுமையே போனது

  

”இன்னும் என்னதான் செய்றாங்கன்னு தெரியலையே” என புலம்பவே தொடங்கினான்.

  

சக்திக்கு என புதுப்புடவை தந்தார்கள், அவள் அணிந்து வந்ததும் சாந்தியே சக்திக்கு நகைகளை அணிவித்து அலங்காரம் செய்தார். அம்சமாக இருந்தாள் அவருக்கே மனதில் நம்ம மகனுக்கு ஏத்த பொண்ணுதான் என நினைத்தே விட்டார். அவளோ ஒன்றும் புரியாமல் அமைதியாக இருந்தாள்

  

”என்னம்மா அமைதியா இருக்க, ஏதாவது பிரச்சனையா, எதுவாயிருந்தாலும் கேளு நான் சொல்றேன்” என சொல்ல அவளோ

  

”இப்ப நாம வெளிய எங்கயாவது போறோமா” என கேட்க அவரோ

  

”இல்லையே”

  

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.

Add comment

Comments  
# RE: தொடர்கதை - நீ கண்ணானால் நான் இமையாவேன் - 09 - சசிரேகாmadhumathi9 2022-11-22 17:20
:clap: thanks sasi. :GL:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

💬 Most Commented 💬

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top