(Reading time: 8 - 15 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"ம்ம்ம்ம்ம்... என்ன செய்வது, நல்ல பிள்ளை தான் ஆனால் அவனுக்கு இப்போ தனியா பிஸ்னஸ் செய்யும் ஆசை வந்து பிடிச்சிருக்கே..."

  

"அதில் தப்பில்லையே மேடம்..."

  

விவேக்கிற்காக இயல்பாக பாரதி பரிந்து பேசுவதை கண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல், கைகளால் உதடுகளை மறைத்து சிரித்தாள் உமா. கற்பகம் தொடர்ந்தாள்,

  

"தப்பில்லை தான் பாரதி... ஆனால் ஏற்கனவே இரண்டு கம்பெனி இருக்கு... அதை கவனிக்காமல் இப்படி அவன் தனியா தொடங்கினால் இருப்பதை என்ன செய்வது?"

  

"நீங்கள் அவர் கிட்ட எடுத்து சொல்லலாமே மேடம்..."

  

"ம்ம்ம்... சொன்னால், புது பிஸ்னஸ் கூடவே இதையும் சேர்த்து கவனிசுக்குறேன்னு சொல்றான்..."

  

"ஓ!"

  

பாரதியின் முகத்தை கூர்ந்து கவனித்த படி பேசினாள் கற்பகம்,

  

"சரி அது கூட இப்போதைக்கு பிரச்சனை இல்லை... ஆனால் அவனுக்கு பிஸ்னஸ் தொடங்க பணம் வேணுமாம்..."

  

இது பாரதிக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் என்பது மட்டும் அல்லாமல், இதில்

  

அவள் என்ன சொல்ல முடியும் என நினைத்து அமைதியாக இருந்தாள் பாரதி.

  

அவளின் அமைதியை தவறாக புரிந்துக் கொண்டு, உதட்டில் தோன்றிய வெற்றி புன்னகையுடன் பேசினாள் கற்பகம்,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.