(Reading time: 9 - 17 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

"நிஜமா தானே சொல்றீங்க? அப்போ உங்க மொபைல் நம்பர் தாங்க..." என்றான்.

  

இந்துவின் முகத்தில் தயக்கத்தின் சாயல் தோன்றவும்...

  

"இல்லை, இல்லை வேண்டாம்.. என்னவோ தெரியலை உங்களுக்கு என் மேல நல்ல அபிப்ராயமே இல்லை..." என்றான் சஞ்சீவ் சிணுங்கலாக!

  

"ஐயோ, அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை... என் நம்பரை நோட் பண்ணிக்கோங்க.. xxxxxxxxxx" என்று பட்டென்று சொன்னாள் இந்து.

  

"தேங்க்ஸ்... என் போனில இருந்து ஒரு மிஸ்ட் கால் தரேன். நீங்களும் ஸ்டோர் பண்ணிக்கோங்க.. ஆனால் ஒன்னு.. உங்களுக்கு நான் மெசேஜ் வேணா அனுப்புவேன், கால் பண்ணி பேச மாட்டேன்... என்னை பத்தி உங்க அபிப்ராயம் நிஜமாவே மாறும் போது நீங்களே எனக்கு கால் பண்ணுங்க.. அதுக்கு அப்புறம் தான் நான் உங்க கிட்ட போன்ல பேசுவேன்..."

  

"ஓஹோ, அப்படியா! அதையும் பார்ப்போம்... உங்களைப் பத்தி எனக்கு நல்ல அபிப்ராயம் வரும்னு நினைக்குறீங்க?" என்று இந்து விளையாட்டாய் கேட்கவும்..

  

"எல்லாம் வரும் பாருங்க..." என்று வீறாப்புடன் சொன்னான் சஞ்சீவ்!

  

"நீங்க சொன்னா சரி தான், சஞ்சீவ்! நீங்க இங்கே இருந்து எப்படி போவீங்க? வாங்க, நான் ஆஃபீஸ்'ல இறங்கிக்கிறேன். ஜெயா அண்ணாவை உங்களை டிராப் பண்ண சொல்றேன்..."

  

"இல்லை இந்து, வேண்டாம்... நான் சென்னை ஆட்டோல போய் ரொம்ப நாள் ஆச்சு... ஸோ, இன்னைக்கு ஆட்டோல போகப் போறேன்... நீங்க கிளம்புங்க... பை.."

  

அதற்கு மேல் அவனை வற்புறுத்தாமல்,

   

"பை," என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள் இந்து. கார் மெல்ல நகரத் தொடங்கியது.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.