ஏனோ அவளின் மனம் லேசாகி விட்டது போல் இருந்தது. தந்தையின் மறைவுக்குப் பின் மறந்துப் போயிருந்த பழைய குதூகலம் மீண்டும் வந்து விட்டதாக தோன்றியது. அவளையும் அறியாமல் இந்துவின் முகத்தில் பெரிய புன்னகை மலர்ந்தது.
கார் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்ற சஞ்சீவிற்கு, பிரபு தேவா ஒரு பாடலில் ஆடுவது போல் நடு ரோட்டில் சென்று ஒரு ஆட்டம் போட வேண்டும் என்று தோன்றியது. அவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. மனதை அடக்கியவன், தான் செய்ய வேண்டியவற்றை திட்டம் போட்டவனாய், ஒரு ஆட்டோவை நிறுத்தி,
"மயிலாப்பூர் போகணும்.... அண்ணா" என்றான்.
*************
சஞ்சீவ் அன்று வீடு வந்து சேர இரவு ஏழு மணிக்கு மேல் ஆனது. அவனோடு வந்த பணியாள் போன்ற ஒருவன், பெரிய பெட்டி ஒன்றை தூக்கி வர, அவனை தொடர்ந்து சஞ்சீவ் உள்ளே வந்தான். ஹாலில் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்த கீதாவும், காஞ்சனாவும் அதிசயமாக பார்ப்பதை கவனித்து விட்டு அவர்களைப் பார்த்து கை அசைத்தான் சஞ்சீவ். ஆனால் மேலும் விபரங்கள் கொடுக்காமல், பணியாளை பெட்டியை மாடியில் எடுத்து வைக்க சொல்லி அழைத்து சென்றான். பெட்டியை வைத்து விட்டு வந்தவனை வழி அனுப்பி விட்டு, ஹாலில் சென்று காஞ்சனாவின் அருகில் அமர்ந்தான் சஞ்சீவ்.
"என்னடா சஞ்சீவ், இது பெட்டி எல்லாம்...???" என்றார் காஞ்சனா ஆர்வத்துடன்.
"பூதம் காத்த புதையல், அம்மா..."
"அது சரி! அது ஏன் நீ வெளியில் இருந்து வாங்கிட்டு வரணும்... உன் ரூமுல இருக்குறது எல்லாமே பூதம் காத்துட்டு இருக்கும் பொருள் தானே...."
"ஆஹா, என்ன தவம் செய்திருக்கிறேன் நான்... என்னை ஈன்ற அன்னையே என்னை பூதம்
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.