"தெரியும் அண்ணி. வீட்டில நீங்க எல்லோரும் கூட இதையே தான் எப்போதும் சொல்வீங்க....." என்று இழுத்தான் சஞ்சீவ்...
"அப்புறம்...????"
"இதெல்லாம் எங்க தலைவி சிம்ரன் சொல்லி கொடுத்தது அண்ணி......"
கீதா நிஜமாகவே புரியாது பார்க்கவும்...
"சிம்ரன் என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா? பொம்பளைங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளைய விட தெரியாதுன்னு சொல்ற ஆம்பளைய தான் ரொம்ப பிடிக்கும்..."
ஒரு நிமிடம் திகைத்து நின்ற கீதா, கலீரென சிரித்தாள்.
"அது சரி, இந்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்???" என்றாள் கீதா சிறிது ஆர்வத்துடன்.
"அவங்க முதல் முறை பார்த்ததோட சரி.. அப்புறம் என்னைப் பார்த்தால் பேசவே மாட்டேங்குறாங்க... சரி கொஞ்சம் மக்கு மாதிரி வேஷம் போட்டு பேசி பார்க்கலாமேன்னு நினைச்சேன்...."
"ஓஹோ! உங்களுக்கு விளையாட இந்து தான் கிடைச்சாளா? அது போகட்டும் இந்து உங்களை ஒழுங்கா ட்ரீட் பண்ணினாளா? நல்லா பேசினாளா?"
அண்ணியிடம் எதை எல்லாம் சொல்வது என்று எண்ணமிட்டவாறே,
"ம்ம்ம்... பின்ன உங்க recommendation ஆச்சே, சும்மாவா? அவங்க ஆபீஸ் conference ரூமில உட்கார வச்சு பேசினாங்க..."
"ஒ! காஃபி டே எப்போ இந்துவோட conference ரூமா மாறிச்சு? அதிசயமா இருக்கே......"