Page 7 of 7
ஒரு வினாடி திகைத்த சஞ்சீவ், அதற்குள் புரிந்துக் கொண்டவனாய்,
" உங்களுக்கு அதுக்குள்ளே லேட்டஸ்ட் நியூஸ் வந்தாச்சு போல இருக்கே.... இதை கூடவா உங்க ஃபிரென்ட் ஒப்பிப் பாங்க?" என்றான் கடுப்புடன்!
"இதில மறைக்க எதுவும் இல்லைன்னு இந்து நினைச்சிருக்கலாம்... நிஜமாகவே மறைக்க என்ன இருக்கு?"
"ஒன்னும் இல்லை தான்... மை காட்... இது எல்லாம் உங்க வேலை தானே? நீங்க சொன்னதை அப்படியே இந்து செஞ்சாங்க?" என்றான் சஞ்சீவ் ஏமாற்றத்துடன்.
அவன் குரலில் இருந்த ஏமாற்றத்தை கவனிக்காததுப் போல் பாவித்து,
"அப்படி சொல்ல முடியாது... கொஞ்சம் நேரம் ஒதுக்கி தனியா பேச சொன்னேன்... காஃபி டே எல்லாம் என் ஐடியா இல்லை..." என்றாள் கீதா!
தொடரும்...