எதிர்பார்ப்புடன் விஷ்ணுப்ப்ரியா பக்கம் பார்த்த சுவாதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது... விஜயாவும், பத்மிநியுமே பரவாயில்லை என்பதுப் போல, சுவாதியின் பார்வையை சந்தித்த விஷ்ணுப்ப்ரியா வெறுப்புடன் முகத்தைச் சுழித்து, வேறு பக்கமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்.
மீண்டும் ஒரு அடி! சுவாதிக்கு இதுவும் வலிக்கத் தான் செய்தது! ஆனால் அத்துடன் இந்த நாள் முடிய போவதில்லை என்று சொல்வதைப் போல,
“என் மகன் நல்லவன்! அதனால் தான் உதவி செய்யனும்னு நினைச்சு உன்னை கல்யாணம் செய்துக்குறேன்னு சொல்லி இருக்கான்... அவனை நல்லவனா வளர்கிறதா நினைச்சு, ஏமாளியா வளர்த்திருக்கேன்னு இப்போ தான் புரியுது... உன்னைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா இருக்கு...” என்றாள் விஜயா வெறுப்புடன்.
“இல்லை, நீங்க நினைக்குற மாதிரி இல்லை. எங்க கல்யாணம் நடந்த விதம் உங்களுக்குப் பிடிக்காததா இருக்கலாம். ஆனால், அவர் என்னை விரும்பி தான் கல்யாணம் செய்துக்கிட்டார். இதை அவரே தான் என் கிட்ட சொன்னார்... சித்தப்பா எனக்கு வேற கல்யாணம் நிச்சயம் செய்ததால அதைப் பத்தி பேசாம இருந்ததா சொன்னார்...”
“இதுல ஆச்சர்ய பட என்ன இருக்கு? முதல்ல இருந்தே அவனை நல்லா தெரிஞ்சு வச்சுக் கிட்டு ஒவ்வொன்னையும் ப்ளான் செய்து எல்லாம் செய்திருக்க நீ...”
விஜயா சொன்னதற்கு ஏற்ப பத்மினியும் பேசினாள்!
“அதை சொல்லுங்க, அண்ணி! நாம பொத்தி, பொத்தி, பார்த்து பார்த்து நல்லதை எடுத்து சொல்லி சொல்லி பிள்ளைங்களை வளர்க்கிறோம். அப்படி நல்லவனையா தேடி இவளை மாதிரி இருக்கிறவங்க ஏமாத்துறாங்க... ச்சே இப்படி எல்லாம் வாழுறதுக்கு...”
பத்மினி பேச்சை முடிக்காமல் வேண்டுமென்றே இழுத்து வெறுப்புடன் சுவாதியை பார்க்கவும், சுவாதிக்கு என்ன செய்வதென்றுப் புரியவில்லை... அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் தவறான கோணத்தில் பார்க்கும் இவர்களுக்கு எப்படி அவள் விஷாகனை பணத்திற்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ மணக்கவில்லை என்று சொல்லி நம்ப
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.