This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“போட்டோல பாரேன், சிம்பிள் ஜீன்ஸ் தான், இருந்தாலும் டீ ஷர்ட் மேல அந்த எம்ப்ராயிடரி இருக்க டெனிம் ஜாக்கெட் போட்டதால ஃபேஷனபிலா தெரியுது. நவ்யாக்கு என்ன மாதிரி ஃபேஷன் சென்ஸ் இருக்கு. கிரேட்!” இனியவன் நவ்யாவைப் புகழ்ந்து தள்ளினான்!
“போதும் அந்த நவ்யாவை நீங்க பார்த்து ரசிச்சது.” – பொறாமையுடன் இனியவன் கையில் இருந்த மொபைலை பிடுங்கினாள் சுந்தரி.
“எதுக்குப் பிடுங்குற, சுந்தரி? உண்மையை உண்மைன்னு சொல்லனும்!”
சுந்தரிக்கு சட்டென்று ஒன்றுப் புரிந்தது.
“எதையும் இனியவனால மனசுல ஒளிச்சு வைக்க முடியாது. கள்ளம் கபடமில்லாம அப்படியே சொல்லிடுவான். நானும் புரிஞ்சுப்பேன்.” ஜெயஸ்ரீ சொன்னதுப்போல மனதுக்குள் மறைக்காமல் அவளிடமும் சொல்கின்றான். மனசுக்குள் வேறு மாதிரியான ஆசை இருந்தால் இதை எல்லாம் அவளிடம் சொல்லாமல் மூடி மறைக்க தானே முயன்று இருந்திருப்பான்?
சுந்தரி பயத்தையும், பொறாமையையும் இனியவனிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்தாள்.
இனியவன் சுந்தரியுடைய யோசனையை கவனிக்கவே இல்லை. மும்முரமாக நவ்யாவின் படத்தில் இருக்கும் டெனிம் ஜாக்கெட்டை தேடிக் கொண்டிருந்தான்.
“இது சரியா இருக்கு சுந்தரி. இதை ஆர்டர் செய்றேன்.”
சுந்தரி மறுத்து எதையும் சொல்லாமல் இனியவனுடைய ஃபோனை கையில் வாங்கினாள்.
“என்ன பார்க்குற?”
“வேற என்ன போட்டோ வச்சிருக்கீங்கன்னு பார்க்குறேன்.”
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.