(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“இவங்க பூ எல்லாம் இல்லை பாட்டி. புயல்! இனிமேல் நீங்க எந்த பயமும் இல்லாம தைரியமா இருக்கலாம்!” என்றாள் சத்யா.

  

“ஆனாலும் வாடகை கொடுக்காம வீட்டுல தங்குறது எனக்கு சரியா படலை,” என தயங்கினாள் சக்தி.

  

“சக்தி, பாட்டிக்கு காசா கொடுக்காம, தோட்டத்தை சரி செய்றது, பெயின்ட் அடிக்குறதுன்னு சின்ன சின்ன வேலையா எடுத்து ஆளை வச்சு செய்ங்க. அப்போ நீங்க காசு கொடுத்த மாதிரியும் ஆச்சு, பாட்டிக்கு பிடிச்ச வீட்டை புதுசாக்கின மாதிரியும் ஆச்சு!” என சத்யா சொன்ன ஐடியா சக்திக்குப் பிடித்திருந்தது. பாட்டியைப் பார்த்தாள்.

  

“உன்னால முடிஞ்சதை செய்ம்மா. முடியலைனாலும் பரவாயில்லை!” என்றார் பர்வதம்.

  

“இல்ல பாட்டி, நான் சத்யா சொன்னதுப் போல செய்றேன். எனக்கு வீடுப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் ஓகே'ன்னா என் ஜீப்பை இங்கே எடுத்துட்டு வரேன்.”

  

“எடுத்துட்டு வாம்மா சக்தி. வந்து ஹாரன் அடி. நான் கேட் திறந்து தரேன். வலதுப் பக்கம் காரு விட தனி இடமும் இருக்கு!” என்றார் பர்வதம் மகிழ்ச்சியாக!

  

🌼🌸❀✿🌷

  

மீண்டும் ஜீப்பை நோக்கி நடந்தார்கள் சக்தியும், சத்யாவும்.

  

“தேங்க் யூ வெரி மச் சத்யா. ரொம்ப டையர்டா இருந்துச்சு ஏதாவது ஹோட்டல்ல தங்கலாம்னு தேடிட்டு இருந்தேன். தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.”

  

“நோ மென்ஷன் சக்தி. இன்னைக்கு நைட் சாப்பிட்டுட்டு அமைதியா படுத்து தூங்கிடுங்க. தப்பி தவறி பாட்டி கிட்ட பேச்சு கொடுத்திறாதீங்க. பேசினீங்கன்னு வைங்க, நீங்க தூங்க போக ஒரு மணி, இரண்டு மணி ஆயிடும். அப்புறம் நீங்க ரெஸ்ட் எடுக்க முடியாது. நாளைக்கு பகல்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.