(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

டைம்ல அவங்க கிட்ட பேசுங்க.”

  

“தேங்க்ஸ் ஃபார் தி டிப். எனக்கு வை-ஃபை கனக்ஷன் வேணும். எந்த சர்வீஸ் நல்லா இருக்கும்? கனக்ஷன் வர ஏவ்வளவு நாளாகும்?”

  

“எப்படியும் ஒரு வாரம் ஆயிடும்.”

  

“ஒரு வாரமா?”

  

“அதான் மொபைல் வச்சிருக்கீங்களே. ஹாட் ஸ்பாட் போட்டு யூஸ் செய்ங்க சக்தி. என்ன சின்னப் பொண்ணு மாதிரி கேள்வி கேட்குறீங்க! எப்போவுமே கெத்து மெயின்டெயின் செய்ங்க!”

  

சக்தி, சத்யாவை வித்தியாசமாக பார்த்தாள். ஆனால் ‘லூசாம்மா’ என்று இல்லாமல், ‘யாரும்மா நீ’ என தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்துடன் பார்த்தாள்!

  

இருவரும் ஜீப்பிடம் வந்து சேர்ந்ததும்,

  

“நானே வீட்டுக்கு போயிடுவேன், தேங்க்ஸ் அகேயின். உங்க ஹஸ்பன்ட் கிட்டேயும் சொல்லிடுங்க,” என்றாள் சக்தி.

  

“பொதுவா இங்கே பயமில்லை. இருந்தாலும் தனியா இருக்க போறீங்க, கவனமா இருங்க சக்தி. என் நம்பர் தரேன் சேவ் செய்து வச்சுக்கோங்க. எந்த நேரமா இருந்தாலும் தயக்கம் இல்லாமல் என்னை கூப்பிடுங்க.”

  

சத்யா சொன்ன நம்பரை மொபைலில் சேவ் செய்து விட்டு, ஜீப்பைக் கிளப்பி சென்றாள் சக்தி.

  

🌼🌸❀✿🌷

  

மார்க்கெட்டை அடைந்த உடனேயே அபினவின் கண்கள் எதிர்பார்ப்புடன் சுழன்றது.

  

தூரத்தில் அஹல்யா நடந்து வருவது தெரியவும் தேடியது கிடைத்து விட்ட சந்தோஷம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.