(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சேன்ஜ் செய்துட்டு வந்திடுறேன்,” என்று சொல்லிவிட்டு சென்றான்.

  

டிவியில் ஓடிக் கொண்டிருந்த நியூஸை இரண்டு நிமிடங்கள் கவனித்த அபினவை கிச்சனில் இருந்து வந்த பக்கோடா வாசனை இழுத்தது.

  

சத்யா எப்போது அந்த பக்கோடாவை எடுத்து வந்து தருவாள் என்று ஆவலுடன் காத்துக் காத்து இருந்துப் பார்த்தவன், அவள் வருவதாக தெரியாததால் எழுந்து கிச்சனுக்கே சென்றான்.

  

காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சத்யா, அபினவை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் ஸ்டவ்வில் இருந்த பக்கோடாவை திருப்பி போடும் வேலையில் ஈடுப்பட்டாள்.

  

“இவ்வளவு பக்கோடா ரெடியா இருக்கு. எடுத்துட்டு வந்து தராம அநியாயம் செய்றீங்க!” என்றான் அபினவ்.

  

“அபினவ் சார்க்கு எல்லாம் நான் தர முடியாது!” என 'சார்'க்கு தனி அழுத்தம் சேர்த்து சொன்னாள் சத்யா.

  

அபினவிற்கு சத்யாவின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.

  

“சாரிக்கா! இன்ஸ்பெக்டர் முன்னாடி உங்களை அக்கான்னு கூப்பிட்டா அவருக்குப் பிடிக்க மாட்டேங்குது. எரிச்சுடுற மாதிரி முறைக்கிறார்.”

  

“அவரையா உன்னை அக்கான்னு கூப்பிட சொன்னேன்? என்னை தானே கூப்பிட சொன்னேன்!” என்றாள் சத்யா இலகுவாக.

  

‘நீங்க ஈசியா சொல்லிடுறீங்க. தேன் சார் கோபப்பட்டா, அவர் கிட்ட மாட்டிட்டு யாரு முழிக்குறது?”

  

“அவரு அப்படி தான்னு உனக்கு தெரியாதா? அவரு சிரிச்சு நீ பார்த்திருக்கீயா?”

  

“ஹ்ம்ம், அதோ இந்த போட்டோல பார்த்திருக்கேன்.”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.