(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

நம்ம கல்யாணத்தை தள்ளிப் போட எனக்கு மனசு வரலை... அதான் இந்த பிஸி டைம்லேயே நம்ம கல்யாணம் நடந்திருச்சு... நீ எனக்காக அட்ஜஸ்ட் செய்துப்பீயா???”

  

மிகுந்த தயக்கத்துடன் சொன்னவனை நிமிர்ந்துப் பார்த்தாள் பாரதி.

  

அவளின் பார்வையில் அவனுக்கு என்ன புரிந்ததோ,

   

இப்போ உடனே போக முடியாது... கொஞ்ச நாள் கழிச்சு...” என விவேக் தொடரவும், அவனின் பேச்சில் குறுக்கிட்டு,

  

ப்ச் விவேக்... நீங்க எங்கே இருந்தாலும் எனக்கு அங்கேயே தேன் மழை கொட்ட தான் செய்யும்... எங்கேயும் தனியா போகணும்னு கிடையாது... உங்க பக்கத்துல இருந்தாலே போதும்...” என்றாள் பாரதி அமைதியாக!

  

விவேக்கின் கண்களில் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் சேர்ந்து மின்னியது! பாரதியின் மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டியவன்,

  

உனக்கு இப்படி எல்லாம் பேச தெரியுமா? தேங்க்ஸ் ரதி... தேங்க் யூ வெரி மச் ஃபார் யுவர் அண்டர்ஸ்டாண்டிங்... அப்புறம், இந்த பிஸி பீரியட்லேயே நம்ம புது கம்பெனியையும் ஸ்டார்ட் செய்யலாம்னு இருக்கேன்... அப்போ அந்த வேலையும் இப்போவே நடந்திரும்...” என்றான்.

  

குட், ஸ்டார்ட் செஞ்சிடுங்க... ஆல் தி பெஸ்ட்...” என்றாள் பாரதி உண்மையான அக்கறையுடன்!

  

ஹலோ, இந்த மாதிரி ஃபார்மலா எல்லாம் ஹஸ்பன்ட் கிட்ட ஒய்ஃப் விஷ் சொல்லக் கூடாது ரதி...”

  

விவேக்கின் கண்களில் மின்னிய குறும்பை ரசித்துக் கொண்டே,

   

வேற எப்படி சொல்லனும்?” எனக் கேட்டாள் பாரதி.

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.