(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

முன்பே, அவன் கேட்ட முத்தத்தையும் கொடுத்து விட்டு எழுந்தவள்... ஒரு சில நிமிடங்களில் அறையை விட்டு வெளியே வந்தாள்.

  

🌼🌸❀✿🌷

   

மலாவும், மதுவும் குழந்தையுடன் விளையாடிய படி பேசிக் கொண்டிருப்பதை கவனித்தவள், சமையலறைப் பக்கம் சென்றாள். அங்கே ரமேஷும், பவித்ராவும் ஜோடியாக இரவு உணவு தயார் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். பாரதி வரவும், ரமேஷ் அவர்கள் இருவரையும் விட்டு விட்டு சென்றான்.

  

சாரி பவி, டிஸ்டர்ப் செய்துட்டேனோ?” என்றாள் பாரதி.

  

ஹ்ம்ம்... கிண்டலா?” என பவித்ரா கேட்க,

  

இல்லை பவி, நான் வந்தப்போ ஒரே சிரிப்பு சத்தமா இருந்ததே... அதான்...”

  

அதுவா... அவர் முதல் முதல் செய்த சாம்பார் பற்றி சொல்லிட்டு இருந்தார்... அந்தக் கதையை உனக்கு நான் அப்புறமா சொல்றேன்... இப்போ இங்கே வேலை ஒன்னும் இல்லை... வா நாமளும் ஹாலுக்கே போகலாம்...” என தோழியை தன்னுடன் அழைத்துச் சென்றாள் பவித்ரா.

  

சிறிது நேரத்தில் விவேக்கும் வந்து விட, மீண்டும் அரட்டையும் கலாட்டாவுமாக நேரம் ஓடிச் சென்றது!

   

🌼🌸❀✿🌷

   

விவேக், பாரதி மற்றும் மது அன்று பவித்ரா வீட்டிலேயே தங்கி இருந்து விட்டு மறுநாள் வீடு திரும்பினார்கள்.

   

விவேக் முன்பே பாரதியிடம் சொல்லி இருந்ததுப் போல அன்று முதலே அலுவலகம் செல்ல தொடங்கினான். ஆனால், தொடர்ந்து வந்த நாட்களில், அவ்வப்போது தாமதமாக சென்றோ, சீக்கிரமாக வீடு திரும்பியோ கற்பகத்திடம் அவன் திட்டு வாங்கியதுடன், பாரதியையும் சின்ன

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.