”உன்னால என்னை வெட்ட முடியாது, ஏதோ அடங்கிப் போறேன்ங்கறதுக்காக ஆட்டம் போடாத”
”உன் ஆட்டத்தை அடக்கத்தான் நான் வந்தேன், இப்ப நீ தாலியை கட்டு இல்லை உன் தலையை சீவிடுவேன்” என சொல்ல அவனோ
”இந்த அருவாளை பிடுங்க எனக்கு ஒரு நொடி ஆகாது”
”அப்படியா எங்க பிடுங்கு பார்க்கலாம்” என்றாள் கெத்தாக அவனோ சட்டென அந்த அருவாள் பிடித்திருந்த அவளின் கையை இறுக்கமாக பிடித்தான், பிடி இரும்பு பிடியாக இருந்தது அதில் அவள் வலியில் ஆஆ என முனக அதற்கே அவன் பயந்து தன் கையை எடுத்துக் கொண்டு
”என்னாச்சி வலிக்குதா”
”பாவி பாவி இப்படியா என்னை கஷ்டப்படுத்துவ”
”இல்லை நான் மெதுவாதான் பிடிச்சேன்”
”பொய் வேணும்னே என் கையை உடைக்கனும்னு திட்டம் போட்டு பிடிச்ச”
”திட்டமா அம்மா தாயே ஆளைவிடு, எங்க உன் கழுத்தை காட்டு தாலியை கட்டறேன் இந்த அருவா ஒண்ணு குறுக்க குறுக்க அட தள்ளி வையேன்” என சொல்ல அவளும் சற்று நகர்த்தி வைத்தாள் ஆனாலும் முழுதாக எடுக்கவில்லை அவனோ பெருமூச்சுவிட்டு அவளின் கழுத்தில் தாலியை கட்டிக்கொண்டே
”இந்த தாலி உனக்கு எந்த சுகத்தையும் தராது உனக்கு வேலியா இருக்கும்”
”நீ தாலியை கட்டிட்டதால உன் வாழ்க்கை மாறாது, இனிதான் நீ நரகத்தை அனுபவிப்ப”