(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

  

பர்வீன் காட்டிய பக்கம் இரண்டு பேர் டாக்டர் கோட் அணிந்து நடந்து வந்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவர் வயதானவர், ஒருவர் நடுத்தர வயதானவர். இரண்டுப் பேரும் அங்கே இருந்த லிஃப்ட்டின் முன் வந்து நின்றார்கள்.

  

“எக்ஸ்க்யூஸ் மீ டாக்டர் பிரசாத்,” பவ்யமாக பேசினாள் பர்வீன்.

  

வயதான மருத்துவர் பர்வீன் பக்கம் பார்த்தார்.

  

“இவங்க சத்யா, இன்ஸ்பெக்டர் தென்றல்வாணனோட மனைவி. உங்களை சந்திக்க வந்திருக்காங்க.”

  

“இன்ஸ்பெக்டரா?” டாக்டரின் நெற்றி யோசனையினால் சுருங்கியது.

  

“நம்ம ஹாஸ்பிட்டல் கேம்ப் டைம்ல ரொம்ப உதவி செய்தாரே டாக்டர், அந்த இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்.”

  

“ஓ ரைட் ரைட், இன்ஸ்பெக்டர் தேன். உன்னையும் எனக்குத் தெரியுமே சத்யா கரக்ட்?”

  

“கரக்ட் டாக்டர். உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி!”

  

“மெமரி இல்லாம டாக்டரா இருக்க முடியாதும்மா. என்ன விஷயமா பார்க்க வந்தீங்க? ஏதாவது டொனேஷன் வேணுமா?”

  

“அதெல்லாம் இல்லை டாக்டர். அஹல்யா டீச்சர் பத்தி பேச வந்தோம்,” என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள் சத்யா!

  

🌼🌸❀✿🌷

   

This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.

  

தொடரும்

 

Go to Oru kili uruguthu story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.