(Reading time: 6 - 12 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஒரு போலீஸ்காரரா இருந்துட்டு இப்படி பேசுறது சரியில்லைன்னு உங்களுக்கு தோணலையா? எதையும் ஆராய்ந்து புரிஞ்சு முடிவு செய்யனும் அபி--- எஸ்.ஐ சார்.”

  

அபினவ் என்று சொல்ல ஆரம்பித்து வேக வேகமாக அவள் எஸ்.ஐ சார் என்று சொன்னது அபினவ் முகத்தில் புன்சிரிப்பை வரவழைத்தது.

  

“ஓகே அஹல்யா, உன்னைப் பத்தி சொல்லு! நான் என்ன தெரிஞ்சுக்கனும்?”

  

“தெரிஞ்சுக்க நிறைய விஷயம் இருக்கு. உதாரணமா, அருண் என் மகன் தான் ஆனால் என் சொந்த மகன் இல்லை. நான் தத்தெடுத்த மகன்.”

  

“அஹல்யா???”

  

“அடுத்து நான் டைவர்ஸ் ஆனவன்னு உங்க கிட்ட சொன்னது பொய்.”

  

“அப்படின்னா?”

  

“நான் உங்க கிட்ட நிறைய பேசனும். இன்னைக்கு, இப்போ பேச முடியுமான்னு தெரியலை.”

  

அபினவ் வாட்சில் நேரம் பார்த்தான்.

  

“ஆமா அஹல்யா மணி ஆச்சு. நீ அருணை போய் பிக்கப் செய். நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன். அப்போ பேசலாம்.”

  

அஹல்யா அபினவை ஆச்சர்யமாக பார்த்தாள். அவள் சொன்ன விஷயங்களை கேட்டப் பிறகும் அவனிடம் எந்த அவசரமும் தென்படவில்லையே???

  

அபினவ் அவளுடைய பார்வையின் அர்த்தத்தை புரிந்துக் கொண்டான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.