(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பிடிச்சேன், இப்பதான் நான் சந்நியாசியா ஆகலையே”

  

”அதுக்கு பதிலாதான் சம்சாரியாகிட்டியே அப்புறம் என்ன”

  

”கல்யாணம் ஆனா என்னப்பா நான் எல்லாத்தையும் விட்டுடனுமா என்ன”

  

”ஆமாம் விடனும் பொம்பளைங்க கல்யாணத்துக்கு அப்புறம் தங்களோட விருப்பு வெறுப்புகளை விட்டுட்டு புருஷனுக்கும் புகுந்த வீட்டுக்கும் ஏத்த மாதிரி நடந்துக்கலையா, அது போல நீயும் மாறு, அவள் பாவம் உன்னை நினைச்சி எப்படி பயப்படறா பாரு, இந்தளவுக்கு பாசம் காட்டறவளை போய் நீ வெறுக்கலாமா” என சொல்ல அவனோ பதில் சொல்ல திணற சண்முகம் வந்தார்

  

”மாப்பிள்ளை இப்பவே எனக்கு வயசாயிடுச்சி, என் சம்சாரம் இறந்தப்பவே நான் பாதி செத்துட்டேன், ஏதோ என் பொண்ணுக்காக வாழ்ந்துக்கிட்டு இருக்கேன், அவளுக்கு கல்யாணம் ஆனதும் மொத்த சொத்தையும் வரப்போற மருமகனுக்கு கொடுத்துட்டு ஓய்வு எடுக்கலாம்னு இருந்தேன்” என சொல்லி முடிக்கவும் கொம்பனின் தந்தை முன் வந்தார்

  

”கொம்பா பார்த்தியா உன் மாமனாரோட நல்ல எண்ணத்தை, அவரே அவரோட சொத்தை பார்த்துக்கற பொறுப்பை உனக்கு தர தயாரா இருக்காரு, அதை பாருடா அதான் நிரந்தரம், இந்த நாய்களை பழக்கறதை விட்டுடு”

  

”என்னால முடியாதுப்பா எனக்கு பிடிச்சதைதான் நான் செய்வேன்”

  

”என்னடா எல்லாமே உன் பிடிவாதம்தானா, திடீர்ன்னு சந்நியாசி ஆகனும்னு சொன்ன, நான்  எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்கலை, ஒத்த புள்ள நீ எங்களை நினைச்சி பார்த்தியா, உன் மேல எங்களுக்கு இருந்த பாசத்தை துச்சமா நினைச்சி எங்களை விட்டுப் போக பார்த்தியே”

  

“அதான் நான் போகலைல்ல அப்புறம் என்ன, அதோட உங்க பாசத்தை ஒண்ணும் நான் துச்சமா நினைக்கலை, கடவுள் மேல இருந்த பக்தியில” என சொல்லி முடிக்க அதற்குள் காவேரி உள் வந்தாள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.