”அட ஏன்டா என் துணி நனையக்கூடாதுல்ல அதான் மடிச்சி கட்டிக்கிட்டேன் போதுமா”
”ஓ அப்படியா சரி சரிப்பா ம் ஆகட்டும்” என சொல்ல அவனும் துணியை தண்ணீரில் அலசி அலசி எடுத்தான்
”ஏய் ஐலசா ஏய் அப்படி போடு ஏய் நல்லா முக்கு ஏய் அழுக்குப் போகுது பாரு ஏய் நுரை போகுது பாரு ஏய் ஐலசா” என கணக்குபிள்ளை பாட்டுபாட ஒருவழியாக கொம்பன் துணியை தோய்த்து அதை கொடிகயிறில் காய வைத்து
”டேய் கிளிப் கொண்டா காத்துல பறந்து தொலைக்கப் போகுது, மறுபடியும் அழுக்கானா நான்தான் தோய்க்கனும்” என சொல்ல கணக்குபிள்ளையோ கண்கள் கலங்கி நின்றான்
”ஏன்டா அழறா”
”இவ்ளோ சீக்கிரம் நீ குடும்பஸ்தனா மாறுவன்னு நான் எதிர்பார்க்கலை கொம்பா, நீ வேற லெவல் நண்பா”
”டேய் படுத்தாத கிளிப் கொடுடா” என அவனிடம் கேட்டு கிளிப் வாங்கி நைட்டி பறக்காத வண்ணம் மாட்டிவிட்டு ஓய்ந்துப் போய் சோம்பல் முறித்தான்
”என்னடா வேலை இது சே அலுப்பா இருக்கு”
”பிடிச்ச வேலை செய்றப்ப அலுப்பு வராது கொம்பா, சரி வா உள்ள போவோம் பசிக்குது வேற, ஏதாவது காபி தண்ணி குடிக்கலாம்” என சொல்ல கொம்பனோ
”அதானே பொறு காபியை நான் வரவழைக்கிறேன்”
”எப்படி கொம்பா”