(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”காபி” என சத்தமாக வீட்டை பார்த்தபடி கூவினான்

  

”கொம்பா என்ன செய்ற”

  

”ஏன்டா என் முறைபொண்ணு காபின்னு கத்தினா உடனே காபி வருதுல்ல அதே போல நானும் முயற்சி செய்றேன்”

  

”ஏம்பா நீயும் அவளும் ஒண்ணா, இது அவளோட வீடு, காபின்னா காபி வரும் நீ காபின்னு கேட்டா காபி வராதுப்பா”

  

“ஏன் வராது வரும் பாரு” என சொல்லியவன் மீண்டும் காபி என அலறினான்.

  

சில நொடிகள் கழித்து காவேரியே வந்தாள்.

  

”என்ன சத்தம் இங்க”

  

”காபி கொண்டா”

  

”ஏதோ கொடுத்து வைச்சவர் போல கேட்டு வைக்கற, காபியெல்லாம் இல்லை உனக்கு வேணும்னா வந்து நீயே போட்டு குடி”

  

”ஏன் உனக்கு காபி போட தெரியாதா”

  

”தெரியாது”

  

”கத்துக்கயேன் கல்யாணம் ஆன பொண்ணுதானே நீ காபி டீ போட கத்துக்கலாம்ல”

  

”அதானே உனக்கும் கல்யாணம் ஆச்சில்லை நீயும் காபி டீ போட கத்துக்கலாம்ல”

  

”நான் ஆம்பளை நான் ஏன் கத்துக்கனும், சமையல்கட்டு வேலையெல்லாம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.