(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பொம்பளைங்களோடது”

  

”அப்படின்னு யார் பிரிச்சது, இப்படித்தான் பொம்பளைங்களை சமையல்கட்டுலயே முடக்கி வைக்கறது ஆம்பளைங்களோட வழக்கமாயிடுச்சி, காலம் மாறியும் நீங்க திருந்தமாட்டீங்கள்ல, உங்களைப் பொருத்தவரைக்கும் பொம்பளைங்க எப்பவும் ஆம்பளைங்களுக்கு அடங்கி போகனும், அடிமையா வாழனும், சோறு ஆக்கி போடனும், வேலைக்காரி போல வீட்டு வேலைகளை செய்யனும், சே மனுஷங்களா நீங்க, என்னிக்குதான் பொம்பளைங்களை மதிப்பீங்களோ, அவளும் உங்களைப் போல ஒரு மனுஷிதானே, அவளை ஏன்தான் அடிமையாக்கி கொடுமைப்படுத்தறீங்களோ, என்னிக்குதான் இந்த ஆம்பளைங்க ஜென்மம் மாறுமோ, ஆம்பளைங்கன்னா என்ன பெரிய இதுவா, தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு, அவங்க காலடியிலேயே விழுந்து கிடக்கனுமா, அவங்களை எதிர்த்து பேச கூடாது, ஏன் நின்னுகூட பேசிட கூடாதுல்ல, எந்த முடிவையும் எடுக்க கூடாதுஈ எல்லாமே ஆம்பளைங்க எடுக்கற முடிவுகள்தான் அதுக்கு கட்டுப்பட்டு பிடிக்குதோ பிடிக்கலையோ வாழ்ந்து சாகனும், இது எல்லாம் அநியாயம், அக்கிரமம், என்னிக்குதான் பொம்பளைங்களுக்கு விடிவுகாலம் வருமோ” என மூச்சு முட்ட பேசி முடிக்க கொம்பன் அரண்டுப் போனான், கணக்குபிள்ளை கூட ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

  

நன்றாக மூச்சு வாங்கியவள் இவ்விருவரையும் பார்த்து

  

”என்ன” என்றாள் அதிகாரமாக அவர்களோ ஏதும் பேசாமல் அமைதியாக அவ்விடம் விட்டு வீட்டிற்குள் சென்றார்கள், நேராக சென்ற இடம் சமையல் அறைதான் அங்கு கொம்பனின் தாயார் நின்றிருக்க அவரிடம் சென்றார்கள் இருவரும்

  

”அம்மா” என பாசமாக அழைத்தான் கொம்பா

  

”சொல்டா”

  

”எனக்கு காபி எப்படி போடறதுன்னு சொல்லித் தர்றியாம்மா” என கேட்க அதில் உள்ளம் குளிர்ந்தார்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.