(Reading time: 24 - 48 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அதுக்கென்ன ராசா வா வா நான் சொல்லிக் கொடுக்கிறேன், உங்கப்பாவுக்கும் நான்தான் கத்துக் கொடுத்தேன், என்னால முடியாத சமயத்தில அவர் நிறைய முறை காபி போட்டு குடிப்பாரு, எனக்கும் போட்டு தருவாரு, நீயும் கத்துக்க, நாளைக்கு உனக்கே பயன்படும்”

  

”எனக்கு இன்னிக்கே பயன்படுதும்மா“

  

“அப்படியா ராசா சரி வா நான் சொல்லித்தரேன், அம்மா இருக்கறப்ப உனக்கென்ன கவலை என்ன தெரியலையோ கேளு சொல்லித்தரேன் கத்துக்க, நாலு பேரு உன்னை ஒரு குறை  கூட சொல்லிடக்கூடாது சரியா”

  

”சரிம்மா” என சொல்ல அவரும் தன் மகனுக்கு காபி எப்படி போடுவது என அழகாக சொல்லிக் கொடுக்க அதை கொம்பனும் கணக்குபிள்ளையும் கற்றுக் கொண்டு 2 காபிகளை போட்டு அதை குடிப்பதற்காக ஓரிடம் பார்த்து அமர்ந்து ஒரு சிப் பருகினார்கள் தேவாமிர்தமாக இருந்தது

  

”ஆஹா என்ன ருசி என்ன ருசி நம்ம கையால போடற காபிக்கு மட்டும் தனி ருசியா இருக்கே அது எப்படி கொம்பா”

  

”என்ன செய்றது எல்லாம் நேரம், ஒரு காபி கேட்டதுக்கு என் முறைபொண்ணு எப்படி எப்படி பேசிட்டா பாரேன், விட்டா என்னை கொடுமைக்காரன்னு முத்திரை குத்தி ஊர்க்காரங்க முன்னாடி நான் எடுத்து வைச்ச நல்ல பேரை கெட்ட பேராக்கிடுவா போல இருக்கு, இனிமேல நான் அவள்கிட்ட ஜாக்கிரதையா இருக்கனும்”

  

”ஆமாம் கொம்பா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும், இன்னிக்கு நைட் மட்டும் நீ ஜாக்கிரதையா இருந்தேன்னு வையேன் தப்பிச்சிடுவ”

  

”அதென்னடா நைட்டு, என்ன விசயம் எதுக்கு இப்படி பதட்டமா பேசி வைக்கற”

  

”பின்ன இன்னிக்கி என்ன நாள்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.