(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இப்போ இருப்பது நீங்க தான்... உங்க மேல் நான் ரொம்ப அன்பு மட்டுமில்லை, உயிரையே வச்சிருக்கேன்...”

  

பேச்சின் முடிவில் பாரதியின் குரலில் இருந்த நெகிழ்ச்சியை கவனித்த விவேக்,

  

என்ன ரதி இது? உன்னைப் பத்தியும், உன் மனசைப் பத்தியும் எனக்கு நல்லா தெரியும். சரி, இப்போ எங்கே போறோம் அதை சொல்லலாம் தானே?” என அவள் விரும்பியதுப் போலவே பேச்சை மாற்றினான்!

  

இன்னும் கொஞ்ச நேரம் தான் விவேக். ரீச் ஆன பிறகு உங்களுக்கே தெரிய தானே போகுது...” என்றாள் பாரதி சீண்டும் விதத்தில்...

  

அவளின் சீண்டலிலும், அதன் காரணமாக பளிச்சிட்ட அவளின் முகத்திலும் கவரப் பட்டு அவளையே இமைக்காமல் பார்த்தான் விவேக்...

   

ம்ம்ம்.... சரி, இப்படி என்ன ஏதுன்னு கேட்காமல் கூட வரதுக்கு எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் கிடையாதா ரதி?”

  

செல்லம் கொஞ்சும் குரலில் கேட்டவனை, ஒரு பார்வை பார்த்து விட்டு,

  

என்னவோ தினமும் கவனிப்பு இல்லாமல் இருப்பது போல் தான்...” என்று கேலி குரலில் சொன்னாள் பாரதி.

  

அதெல்லாம் வேற... இது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்...”

  

ம்ம்ம்... நல்ல பையனா, சொன்ன பேச்சுக் கேட்டு நடந்தீங்கனா...”

  

ஓகே, குட் பாயா இருப்பேன், அப்போ உனக்கு ஓகேவா?”

  

ம்ம்ம்...”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.