(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

இப்படி சொன்னா என்ன அர்த்தம்? எனக்கு பிடிச்ச ஸ்பெஷல் சம்திங் தரதுக்கு உனக்கு ஓகேன்னு எடுத்துக்கவா?”

  

“...”

  

ஹை ஜாலி ஜாலி... காரை எங்கேயாவது ஓரமா நிறுத்து... கம் ஆன்...”

  

என்னங்க நீங்க? ப்ளீஸ்... முதல்ல வந்த வேலை முடியட்டும்... அப்புறம் பார்க்கலாம்...”

  

பார்க்கலாமா? பேச்சு மாற கூடாது, சரியா?”

  

சரி சரி ஓகே... நாம வர வேண்டிய இடம் பக்கத்துல வந்தாச்சு...”

  

காரை அந்த மருத்துவமனையின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி, இறங்கி வெளியே வந்தாள் பாரதி. அவளுக்கு முன் இறங்கி நின்றிருந்த விவேக், அவளை கேள்வியாக பார்க்கவும்,

  

வாங்க போகலாம், அஞ்சு மணிக்கு அப்பாயின்ட்மென்ட்...” என்றாள்.

  

குழப்பத்தோடு பாரதியைப் பார்த்த விவேக், ஏதோ யோசித்தவனாக,

  

ஹேய் பாரதி, நிஜமாவா, என் கிட்ட நீ சொல்லவே இல்லையே?” என்று சந்தோஷப் பட்டான்.

  

அவனின் பேச்சையும், சந்தோஷத்திற்கான காரணத்தையும் புரியாமல் முதலில் திகைத்தவள், பின் தாமதமாக புரிந்துக் கொண்டு,

  

அதெல்லாம் ஒன்னுமில்லை... சும்மா என் கூட வாங்க....” என்று சிணுங்கினாள்.

  

குழந்தையும் இல்லையா? அப்புறம் இங்கே ஹாஸ்பிட்டல் வந்து என்ன செய்ய போறோம்?”

  

பாரதி பதில் சொல்லாமல் விவேக்கின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள். விவேக்கும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.