(Reading time: 8 - 16 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

வருது...” என்று விவேக்கே அவருக்கு பதில் சொன்னான்.

  

டாக்டர் அவனின் நெற்றியையும், தலையையும் ஆராய்வதுப் போல பார்த்துக் கொண்டே,

   

வலி எந்த இடத்தில இருக்கு, நெத்தியிலயா இல்லை தலையிலயா?” என்றுக் கேட்டார்.

  

நெத்திலேயும் வலி தெரியும். ஆனால், ரொம்ப வலிக்குறது தலை உச்சியில் தான் டாக்டர்...”

  

ஓஹோ! எவ்வளவு நாளா இது போல் வலி இருக்கு?”

  

ஒரு ஆறு ஏழு வருஷமாகவே இருக்கு டாக்டர். முன்பு எல்லாம் இப்படி இரண்டு மூணு தடவை எல்லாம் வராது... எப்போதாவது தான் வரும்... கொஞ்சம் நாளா தான் அடிக்கடி தலைவலி வருது...”

  

ஓகே. வேற ஏதாவது டாக்டர் கன்சல்ட் செய்தீங்களா?”

  

இதுவரை இல்லை டாக்டர்...”

  

சரி, அப்போ எதுக்கும் ஸ்கேன் செய்து பார்த்துடலாம்... சிஸ்டர் இவருக்கு...” என டாக்டர் நர்சிடம் விவேக்கிற்கு எடுக்க வேண்டிய ஸ்கேன் விவரங்களை சொல்ல தொடங்கினார்.

  

அந்த சமயத்தை பயன்படுத்தி விவேக் மனைவியைப் பார்த்து முறைத்தான். இதெல்லாம் தேவையா? என்ற அவனின் கண்களின் கேள்விக்கு, அவனருகில் குனிந்து,

  

நல்ல பையனா இருந்தால் தான் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் கவனிப்பு எல்லாம்...” என்று மெல்லிய குரலில் சொல்லி மீண்டும் கண் சிமிட்டினாள் பாரதி.

  

அதற்குள் டாக்டர் ஏதோ சொல்வதை உணர்ந்து இருவரும் அவர் பக்கம் கவனத்தை திருப்பினார்கள்.

  

டாக்டர் அவர்களிடம் எதுவும் சொல்லவில்லை, அந்த வயதான சிஸ்டரிடம் கோபித்துக்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.