அவளுடன் சென்றான்... ஆனால் அவனின் முகத்தில் கேள்வி இருந்துக் கொண்டே இருந்தது...
பாரதி மருத்துவமனையின் உள்ளே சென்று, அவர்கள் பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரின் அறையை கேட்டு தெரிந்துக் கொண்டாள். அந்த அறைக்கு சென்று அங்கிருந்த நர்சிடம் தங்களின் அப்பாயின்ட்மென்ட் பற்றி சொன்னாள். அவர்களின் விபரத்தை சரி பார்த்து விட்டு மருத்துவரை சந்திக்க அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பி வைத்தாள் அந்த நர்ஸ்.
பாரதி என்ன என்று சொல்லாததால் விவேக்கிற்கு ஒன்றும் புரியவில்லை... ஆனாலும் அவளாக சொல்லட்டும் என ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி மனைவியுடன் டாக்டரின் முன் சென்றான்
டாக்டர் தாமஸ் நாற்பதுகளில் இருந்தார். அவருக்கு குறிப்பு எடுத்து உதவி செய்ய என கூட இருந்த நர்ஸ் மிக வயதானவராக இருந்தார். இருவரையும் அமர சொல்லிவிட்டு,
“சொல்லுங்க,” என்றார் தாமஸ்.
“டாக்டர், இவருக்கு அடிக்கடி தலைவலி வருது... அப்படி தலைவலி வரும் போதெல்லாம் பெயின் கில்லர் தான் சாப்பிடுறார்... அடிக்கடி தலைவலி வரதால உங்களை கன்சல்ட் செய்ய வந்தோம்...” என்று தாமஸிற்கு விபரம் சொல்வதன் கூடவே கணவனுக்கும் அவர்கள் வந்திருப்பதன் காரணத்தை புரிய வைத்தாள் பாரதி.
விவேக் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவளோ அவனுக்கு மட்டும் தெரியுமாறு கண் சிமிட்டி, மெலிதாக சிரித்தாள். அந்த கண்கள் சொன்ன செய்தியை உணர்ந்துக் கொண்டவனின் முகத்திலும் சிரிப்பு தோன்றியது. இரு இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன், என்று கண்களால் மனைவிக்கு பதில் சொல்லி விட்டு, டாக்டர் பக்கம் திரும்பி அவர் சொல்வதை கவனித்தான்.
“... அடிக்கடி சொல்றீங்க, எத்தனை நாளுக்கு ஒரு முறை?”
“அப்படி பொதுவா சொல்ல முடியலை டாக்டர்... ஒரு மாசத்துல ஒரு இரண்டு தடவையாவது