(Reading time: 7 - 13 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

  

“ஒரு கேஸ்ல அஹல்யா பேரு அடிப்பட்டுச்சு, அந்த கேஸ் சம்மந்தமா எழுதி இருக்கு. உன் ஃப்ரென்ட் சவீதாக்கும் அதே மாதிரி லெட்டர் வந்திருக்குன்னு சொன்னாங்க. நீ இதுக்கு மேல அஹல்யா பத்தி யார் கிட்டேயும் பேசாதே. நான் அபினவ் கிட்ட சொல்லி வைக்கிறேன்.”

  

“அஹல்யா நல்லப் பொண்ணுங்க. இந்த மொட்டைக் கடிதாசி பத்தி விசாரியுங்க, அதுக்காக அபினவ் கிட்ட அஹல்யா வேண்டாம்னு எல்லாம் சொல்லாதீங்க.”

  

தென்றல்வாணன் மனைவியை முறைத்த முறைப்பில் அவள் பஸ்பமாகி விடப் போகிறாள் என்று சக்திக்கு தோன்றியது. திரும்பிப் பார்த்தால் சத்யா எப்போதும் போல அமைதியாக தெரிந்தாள்.

  

“பத்திரமா இரு சத்யா! சக்தி, நீங்களாவது அவக் கிட்ட சொல்லுங்க. சரி, நான் கிளம்புறேன்!” தென்றல்வாணன் வந்த வேகத்தில் அங்கிருந்து சென்றான்.

  

சக்தி மீண்டும் மேடையில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

  

“என்ன மாதிரியான லவ் இது சத்யா? கூல் ஆஸ் குக்கும்பரா இருக்க தேன் இப்படி கடுகு மாதிரி வெடிக்கிறார்!” என்றாள் சக்தி கேலியாக.

  

"தேவை இல்லாததை பேசாதே சக்தி. அவர் சொன்னதை கவனிச்சீயா டாகடருக்கு, சவீதாக்கும் கூட லெட்டர் வந்திருக்கு,” என்றாள் சத்யா.

  

“அஹல்யாக்கும் வந்திருக்குமோ??? சத்யா, எதுவோ சரியா இல்லை. நாம அஹல்யாவை நேரா பார்த்து பேசுறது நல்லதுன்னு எனக்கு தோணுது. அபினவ் கிட்ட பேசி நாம அஹல்யாவை மீட் செய்ய அரேஞ் செய்றீயா?? இல்லை, இல்ல, நீ வேண்டாம், நானே அபினவ் கிட்ட பேசுறேன்."

  

“ஹலோ, நான் இல்லாம நீ மட்டும் போய் பேசிடுவீயா?”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.