(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

மாற்றினாள்.

  

பாதி சொருகும் கண்களுடன் இதழ்களை கடித்தபடி சிணுங்கினாள். அவளின் சிணுங்கலைக் கேட்டதும் அவனுக்கு கூச்சம் எழுந்தது, அவளின் முகத்தையே பார்த்து ரசித்தான் அவனது பிடி விலகியது, அவளும் தன் கைகளை எடுத்துக் கொண்டாள், அதைகூட அவன் அறியவில்லை, அவளிடம் இன்னும் நெருக்கமாகிப் போன சமயம் இருவரின் முகமும் அருகே அருகே வந்து சேர்ந்தது.

  

அவளின் சொக்கும் பார்வையில் கிறங்கிப் போனான், செவ்விதழ்களைக்கண்டு பைத்தியமானான், கன்னத்து சிவப்பைக்கண்டதில் அவனுக்கு வெட்கம் வந்தது, அவளின் சிணுங்கலில் தன்னை மறந்தான், அவனது உணர்ச்சிகள் கரைபுரண்டு ஓடியது, அதை அணைகட்டு போல அடக்கினாள் காவேரி, சட்டென அவனது நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்து ஒரே தள்ளு, மோகத்தில் இருந்த காரணத்தால் அவனது கால்கள் உறுதியை இழந்திருந்தன, அதனால் அவள் தள்ளிய வேகத்தில் தரையில் விழுந்தான் கொம்பன். அவன் விழவும் அவள் கலகலவென சிரித்தாள்.

  

அவளின் சிரிப்பைக்கண்டு அதிர்ந்தான் கொம்பன் அவளோ

  

”மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது போடா” என சொல்லிவிட்டு வெளியேறி சென்றுவிட்டபின் மெதுவாக யோசித்துப் பார்த்து தனது முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டான் கொம்பன்

  

”போச்சி ஏற்கனவே வாய்ப்பு கிடைக்கறப்பலாம் நம்மளை அவமானப்படுத்துவா, இப்ப நாமளே தேவையில்லாத வேலையை செய்து வைச்சோம், இதை வைச்சே நம்மளை ஓட்டுவாளே, சே என்னாச்சி எனக்கு, இவள்கிட்ட போனாலே ஏதோ ஆயிடுது, என்னை என்னாலயே கட்டுப்படுத்த முடியலை, என்னோட பலவீனத்தை அவள் பலமாக்கிக்கிட்டு என்னை அல்ப்பமா நினைக்கறா, பாரு எப்படி தள்ளிட்டு போறாள்ன்னு, அவ்ளோ பலமா அவளுக்கு இல்லை நான் அந்தளவுக்கு பலவீனமா இருக்கேனா, அவள் சிணுங்கினாலே நான் என்னை அவள்கிட்ட இழந்துடறேன்” என புலம்பியவன் தனது உடலை பார்த்தான் காய்ச்சல் வந்தவன் போல இருக்கவே அதிர்ந்தான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.