(Reading time: 34 - 68 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”மாப்பிள்ளையும் வரட்டுமே“

  

”அவர் பொறுமையா வந்து சாப்பிடுவாருப்பா நீங்க வாங்க ஆமா மாத்திரை சாப்பிட்டீங்களா”

  

”இல்லையே”

  

”வாங்கப்பா சாப்பிட்டு முதல்ல மாத்திரை போடுவீங்க, உடம்பு ஆரோக்கியம்தான் முக்கியம் வாங்கப்பா” என அவரை அழைத்துக் கொண்டு சென்றாள் காவேரி.

  

அவள் சென்றதும் கணக்குபிள்ளை ஒரே ஓட்டமாக ஓடி கொம்பன் முன் மூச்சிரைக்க நின்றான். கொம்பனோ உடைகளை மாற்றி வேறு உடையில் படுக்கையில் அமர்ந்திருந்தான் கணக்கு பிள்ளை வரவும் வியந்தான்

  

”என்னடா”

  

”கொம்பா உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே”

  

”ஏன் கேட்கற”

  

”என்னவோ நடந்திருக்கு இல்லைன்னா இப்படியா குளிச்சிட்டு வந்து நிப்ப உன் முறைபொண்ணு ஏதாவது சேட்டை செஞ்சாளா”

  

”அதை ஏன்டா கேட்கற, அவளால என் மானம் மரியாதை எல்லாம் போயிடுது, அவள்கிட்ட அவமானப்படாம ஜாக்கிரதையா இருக்கனும்னு நினைக்கறப்பதான் அசிங்கப்பட்டுப் போறேன்”

  

”அப்படி என்னதான் நடந்தது நண்பா”

  

”என்னையும் எருமைமாட்டையும் சேர்த்து வைச்சிப் பேசினா எனக்கு கோபம் வந்தது மன்னிப்பு கேளுன்னு சொன்னேன் முடியாதுன்னு சொன்னா அதனால அவள் கையை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.