(Reading time: 25 - 49 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”ஆமாம்”

  

”ஏன் இங்க என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு வேவு பார்த்து என் மாமியார் மாமனார் கிட்ட சொல்லி எனக்கு கெட்ட பேர் உண்டாக்கி என்னையும் கொம்பனையும் பிரிச்சி வைக்கனும்ங்கறதுதான் உன்னோட திட்டமா”

  

”என்னது திட்டமா, அம்மா தாயே அதெல்லாம் இல்லை, கொம்பன் சாப்பிட்டானா இல்லையான்னு தெரியாம அவனோட அப்பா அம்மா கவலையில இருப்பாங்க, ஒரு எட்டுப் போய் கொம்பன் சாப்பிட்டான்னு சொல்லிட்டு கையோட கொம்பனோட துணிமணி கொண்டு வரலாம்னு கிளம்பறேன் அவ்ளோதான், நீ நினைக்கற மாதிரி எதுவும் இல்லை” என சொல்ல அவளோ அவனையே உற்றுப் பார்த்தாள், அவனோ சட்டென தன் தலையில் கைவைத்து சத்தியம் செய்தான்

  

”என் மேல சத்தியமா  சொல்றேன் எந்த திட்டமும் இல்லை துணிமணி எடுக்கத்தான் போறேன்” என சொல்ல அவளோ

  

”சரி இரு நானும் வரேன்”

  

“என்னத்துக்கு ஒண்ணும் வேணாம்”

  

”ஏய் என்ன என்னையே அதிகாரம் செய்ற தொலைச்சிடுவேன்”

  

”இல்லை நீங்க எதுக்காக வரனும்னு பார்க்கிறேன், இந்த சின்ன வேலைக்கு நான் போதாதா”

  

”எனக்கு வேறொரு வேலை இருக்கு அவசியம் நான் போகனும் போதுமா வா என்கூட ஆமா நீ கணக்குபிள்ளைதானே”

  

”ஆமாம்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.