சொன்னதை செய்வேன், முடிஞ்சா சொல்லாததையும் செய்வேன்னு வைச்சிக்க”
”என்னது”
”சும்மா பேச்சுக்கு சொன்னேன் எப்படி வசதி நான் சொல்றதை கேட்கறியா இல்லை தூங்கப்போறியா” என கேட்க அவளோ சட்டமாக அமர்ந்துக் கொண்டு போர்வையை தன் உடல் முழுக்க போர்த்திக்கொண்டு முகம் மட்டும் தெரியும்படி வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து
”பேசு கேட்கறேன்” என்றாள் அதைக்கேட்டவன்
”இதப்பாரு பிரச்சனை உனக்கும் எனக்கும்தானே”
”ஆமாம்“
“அப்படின்னா எதுவாயிருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள செய் வீதியில வேணாம்”
”ஏனாம் உனக்கு அவமானம் வருதுன்னு கஷ்டப்படறியா“
”உன்னை என்னிக்கு கட்டினேனோ அப்பவே என் சந்தோஷம் போயிடுச்சி, நரகத்தில வாழற எனக்கு கஷ்டம் ஒண்ணுதான் கேடு, நான் எனக்காக சொல்லலை, என் அப்பா அம்மாவுக்காக சொல்றேன், பாவம் அவங்க என்னை நினைச்சி வருத்தப்படறாங்க அதனால சொல்றேன்”
”ஓஹோ அப்படியா”
”இப்ப என்ன உனக்கு நடந்த அவமானத்துக்குதான் என்னை பழிவாங்கறியே போதாதா இன்னும் என்னதான் தேவை உனக்கு“
”ஒண்ணுமில்லை நீ கஷ்டப்படறதை பார்த்தா எனக்கு சந்தோஷமா இருக்கு என்னை