தொங்கிடுவேன்னு சொன்னேன், அதுல இருந்து என் நிழலை கூட அந்தாளு தீண்டினதில்லை”
”இந்த விசயம் மத்தவங்களுக்கு தெரியுமா“
“எல்லாருக்குமே தெரியும், கோர்ட்ல கூட இதை சொல்லிட்டேன்”
”உன் மூர்த்தி மாமா இதை கேட்டு நம்பினாரா”
”நம்பறாரு ஏன்னா நான் அவருக்கு துரோகம் இழைக்கலையே, அவர் என்னை சந்தேகப்படலை, வேங்கையனுக்காகதான் அவர் பொறுத்துப் போறாருன்னு தோணுது”
”அப்படின்னா மூர்த்திக்கு சப்போர்ட்டா ஆளுங்க இருந்தா, வேங்கையனை எதிர்த்து உன்னை அவர்கூட சேர்த்து வைக்கலாம்”
”ஆமாம் ஆனா யாருமே எனக்கு ஆதரவு தரலை, மூர்த்தி மாமாவுக்கும் யாரும் உதவி செய்யலை, அவர் பாவம் மஹதி”
”அந்த பாவப்பட்ட மனுஷனை நான் பார்க்கனும் ஜானு”
”தாராளமா அவரை நான் உனக்கு காட்டறேன்”
”காட்டறது மட்டுமில்லை அவர்கிட்ட நான் ஒரு 5 நிமிஷம் பேசனும், பெரிசா எதுவும் இல்லை, அவர் மனசுல நீ எந்தளவுக்கு இடம்பிடிச்சிருக்கேன்னு தெரிஞ்சிக்கனும்”
”ஓ தாராளமா ஏற்பாடு செய்றேன் ஆனா”
”என்ன ஆனா”
”இல்லை அவருக்கு பார்த்த பொண்ணு நீதான்னு அவர் கிட்ட சொல்லிடாத ப்ளீஸ்”