ஒண்ணும் பிரச்சனையில்லையே”
”அதெல்லாம் இல்லை அங்கிள்” என சொல்லியவள் வேணியை பார்த்து
”வேணி ஆன்ட்டி எப்படியிருக்கீங்க 5 வருஷத்துக்கு முன்னாடி உங்களை பார்த்தது இப்பவும் அப்படியே இருக்கீங்களே எப்படி, உங்களோட அழகின் ரகசியத்தை எனக்கு சொல்லுங்களேன் நானும் உங்களை பாலோ பண்றேன்” என சொல்ல வேணிக்கு அதைக்கேட்டு சிரிப்பு வரவில்லை
”முதல்ல உன் தோழிகிட்ட பேசி அவளுக்கு புத்திமதி சொல்லு” என சொல்ல மஹதி அதிர்ந்தாள்
”ஆன்ட்டி என்னாச்சி ஏதாவது பிரச்சனையா“
”ஆமாம் பிரச்சனைதான் உனக்கு நடக்க இருந்த நல்லதையும் கெடுத்துட்டு ஒண்ணும் அறியாத பச்சைப்புள்ளை போல நிக்கறா பாரு”
”புரியலை ஆன்ட்டி எதைப் பத்தி சொல்றீங்க”
”உனக்கு ஒரு பேங்க் ஆபிசர் வரன் வந்ததா இல்லையா”
”ஆமாம் வந்தது அதுவும் இதே ஊர்லதான், சரி நானும் கல்யாணம் செய்துக்கிட்டு இங்க செட்டில் ஆயிட்டா அடிக்கடி ஜானுவை பார்க்கலாம்னு ஆசைப்பட்டேன், எங்க அந்த வரன்தான் தட்டிப்போச்சே”
”தானா போகலை இதோ நிக்கறாளே உன் தோழி இவளால வந்தது”
”என்ன ஆன்ட்டி சொல்றீங்க” என கேட்க அதற்குள் ஜானகி உள்நுழைந்தாள்
”மஹதி அம்மா பேச்சை பெரிசா நினைக்காத, விட்டுத்தள்ளு வாவா ரெயில்ல வந்து களைப்பா இருப்ப கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு”