அந்த உணவின் நறுமணம் மஹதிக்கு பிடித்துவிட்டது அவள் உணவின் வாசனையை நுகர்ந்தபடியே
”வாவ் ஆன்ட்டி சமையல் சூப்பர்” என்றாள்
”சாப்பிடாமலே சொல்றியே” என ஜானகி கேட்க
”சாப்பிடனுமா என்ன அதான் இதோட வாசமே சொல்லுதே, நல்ல வாசம் அப்ப சாப்பாடும் அருமையாதான் இருக்கும்”
”இருக்கும் இருக்கும்” என்றாள் அலுப்புடன் ஜானகி. குபேரனோ
”சாப்பிடறப்ப என்ன பேச்சு, முதல்ல சாப்பிடுங்க அப்புறம் பேசிக்கலாம்” என சொல்ல அனைவரும் சாப்பிடலானார்கள்.
அரை மணி நேரத்தில் சாப்பிட்டு முடித்த கையோடு மஹதி ஜானகியிடம் பேச வந்தாள்
”இப்ப சொல்லு என்ன பிரச்சனை உனக்கு” என கேட்டாள் மஹதி
”எனக்கு எல்லாமே பிரச்சனைதான்“
”குட் அப்படித்தான் இருக்கனும்”
”என்னடி இப்படி சொல்ற”
”பிரச்சனையில்லாத மனுஷன் எங்க இருக்கான் சொல்லு, ஆளுக்கொரு பிரச்சனை இருக்கு, அப்படியிருந்தாதான் வாழ்க்கை நல்லாயிருக்கும், பிரச்சனையே இல்லாதவங்களோட வாழ்க்கை போரிங்கா இருக்கும், உன்னோட வாழ்க்கையில நிறைய பிரச்சனை இருக்குதுன்னா கண்டிப்பா அது சுவாரஸ்யமான வாழ்வாதான் இருக்கும்”