சந்தோசத்துக்காக உயிர் தோழியான உன் வாழ்க்கையை கெடுத்துட்டேன்”
”புரியலை விளக்கமா சொல்லு”
”உனக்கு ஒரு பேங்க் ஆபிசர் வரன் பார்த்தாங்கள்ல”
”ஆமாம் பார்த்தாங்க நல்ல வரன், ஜாதக பொருத்தம் கூட சரியா இருந்தது, பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னாங்க ஆனா, அதுக்குள்ள பையனை பத்தி தப்பான தகவல் வரவும் எங்கப்பாவே இந்த வரனை வேணாம்னு சொல்லிட்டாரு, இல்லைன்னா அந்த பையன்கூடதான் எனக்கு கல்யாணம் பேசி வைச்சிருப்பாங்க ஆமா இதைபத்தி இப்ப ஏன் கேட்கற ஜானு”
”என்னை நீ தப்பா நினைச்சாலும் பரவாயில்லை மஹதி, அந்த பேங்க் ஆபிசர் வரனை நான்தான் கெடுத்துவிட்டேன்“
”ஏண்டி பையன் மோசமானவனா, கெட்டவனா, அவனோட எனக்கு கல்யாணம் ஆனா என் வாழ்க்கை நாசமாயிடும்னு நினைச்சி நீ இப்படி செய்தியா“
”சே சே என்ன இப்படி பேசற, மூர்த்தி மாமா சொக்க தங்கம் அவரை போல ஒரு உத்தமரை எங்கு தேடினாலும் கிடைக்காது, அவரை கல்யாணம் செய்துக்கிட்டா வாழ்க்கை சொர்க்கம் போல இருக்கும்”
”அப்புறம் எதுக்காக அப்படி செய்த”
”சொல்றேன் அதுக்கு முன்னாடி நீ வேற ஒருத்தரை பத்தி தெரிஞ்சிக்கனும்”
”வேற ஒருத்தரா யாரு”
”வேங்கையன்”
”வேங்கையனா யாரு அவரு”