(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

“அவனை பார்க்கறது வேஸ்ட் விட்டுத்தள்ளு” என சொல்ல மஹதியும் சரியென தலையாட்டினாள்

  

”மூர்த்தியை நீ விரும்பறது அப்புறம், வேங்கையன்கிட்ட உனக்கு பிடிக்காதது என்ன ஒரு மனுசனா கூடவா உன்னால அவரை ஏத்துக்க முடியலை”

  

”உனக்கு வேங்கையனை பத்தி தெரியலை, பட்டிக்காட்டான், முரடன், முட்டாள், படிப்பறிவு சுத்தமா இல்லை, டீசன்டா பேச தெரியாது, அடிச்சிட்டுதான் பேச்சையே ஆரம்பிப்பான், காட்டான், 10 வீட்டுக்கு கேட்கற மாதிரி பேசுவான் பேச்சில அடிமைத்தனமும் அதிகாரமும் ஜாஸ்தியா இருக்கும், எல்லாரையும் அதட்டிக்கிட்டே இருப்பான், 2 ஆள் சாப்பாடு சாப்பிடுவான், அந்த வீட்ல இருக்கறதே 3 பேர்தான் நான் போன பின்னாடி எவ்ளோ வேலை செய்றேன்னு தெரியுமா, என் வீட்லகூட அவ்வளவு வேலை செய்ததில்லை, ஒரு வேலைக்காரி போல என்னை நடத்தறான், இவன் வீட்டு வேலைகளை செய்துக்கிட்டு இவனுக்கு அடிமையா நான் வாழனுமா என்ன, பெரிய வீடு அது, அதை சுத்தம் செய்தே நான் நொந்துப்போயிடுவேன்”

  

”ஏன் வேலைக்காரங்க இல்லையா”

  

“இருக்காங்க இருந்தாலும் வேலைக்காரங்களுக்குன்னு ஒரு எல்லை வைச்சிருக்காங்க, அதுவரைக்கும்தான் அவங்க செய்வாங்க மிச்ச வேலைகளை நான்தானே செய்றேன், என்னை மனுஷியா கூட மதிக்கறதில்லை, இதே என் மூர்த்தி மாமாவா இருந்திருந்தா என் நிலைமையே வேற தெரியுமா, அந்த வீட்லயும் 3 பேருதான் ஆனாலும் டீசன்டா இருப்பாங்க, மனுஷங்களை மதிப்பாங்க, என் மூர்த்தி மாமா இருக்கற இடமே தெரியாது, அவ்ளோ சாப்டா பேசுவாரு, அதிர்ந்து பேச கூட வராது அவருக்கு

  

நல்ல படிப்பாளி, கஷ்டப்பட்டு படிச்சி பேங்க் ஆபிசரா வந்தாரு, அவர் இந்த நிலைமைக்கு வர்றதுக்காக நான் காத்திருந்தேன், மூர்த்தி மாமாவும் வேலை கிடைக்கறவரைக்கும் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு தெளிவா இருந்தாரு, அதுக்காகவே நான் காத்திருந்தேன், அவருக்கும் வேலை கிடைச்சது, உடனே எனக்கும் வேங்கையனுக்கும் கல்யாணம் செய்து வைச்சிட்டாங்க, என் கல்யாணத்தப்ப மூர்த்தி மாமாவுக்கு வேலையில்லை அதனால என்ன அது ஒரு காரணமா வைச்சி என்னையும் மூர்த்தி மாமாவையும் பிரிச்சிட்டாங்க, எங்க காதலை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.