(Reading time: 21 - 42 minutes)
Chinna marumagal
Chinna marumagal

  

”இல்லை ஜானு ஆன்ட்டி சொல்றது எனக்குப் புரியலை”

  

”நீ வா முதல்ல ரெஸ்ட் எடு, அப்புறம் நான் எல்லாத்தையும் சொல்றேன் ஓகேவா” என சொல்ல அவளோ குழம்பத்துடனே தலையாட்டி வைக்க அவளுக்கென தனது அறையை ஒதுக்கினாள் ஜானகி

  

”இது என்னோட ரூம்தான் நீ இங்க தங்கிக்க, உனக்கு சாப்பிட சாப்பாடு கொண்டு வரேன்“

  

”வேணாம் ஜானு இப்ப எனக்கு பசிக்கலை, டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் தூங்கி எழறேன், அப்புறம் நாம எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து மதியம் லன்ச் சாப்பிடலாம் ஓகேவா” என சொல்ல அவளும் சரியென்றாள்.

  

மஹதியும் தான் கொண்டு வந்திருந்த பெட்டியை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அங்கிருந்த படுக்கையில் படுத்துக் கொள்ள ஜானகியோ

  

”நல்லா ரெஸ்ட் எடு, நான் அப்புறம் வந்து உன்னை பார்க்கிறேன்” என சொல்ல மஹதியோ

  

”ஜானு” என அழைத்தாள்

  

”சொல்லு மஹதி”

  

”ஆர் யூ ஆல்ரைட், எந்தப் பிரச்சனையும் இல்லையே” என கேட்க ஜானகியோ

  

”அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம், நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ” என சொல்லிவிட்டு கிளம்ப 2 அடி எடுத்து வைத்தவள் பின் என்ன நினைத்தாளோ மஹதியை பார்த்து

  

”ஐ அம் சாரி” என்றாள் அதைக்கேட்டு மஹதி ஆச்சர்யப்பட்டாள்

  

”எதுக்கு இந்த சாரி”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.