”அப்புறம் சொல்றேன்”
”என்னடி ஒரே சஸ்பென்சா இருக்கு”
”ப்ச் எல்லாம் நான் பொறுமையா சொல்றேன்ங்கறேன்ல, நீ தூங்கு, ரெஸ்ட் எடு, மைன்ட்டை ப்ரீயா வைச்சிக்க அப்பதான் என் கதையை கேட்டு அதுக்கு நீ நியாயம் சொல்வ” என சொல்லிவிட்டு ஜானகி சென்றுவிட மஹதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது
”இந்த ஜானுவுக்கு என்னாச்சி, மர்மமாவே பேசி வைக்கறாளே” என சொல்லிக் கொண்டே கண்கள் மூடி உறங்கலானாள்.
நல்ல உறக்கம் 3 மணி நேரம் கழித்து உறக்கம் கலைந்து மெல்ல கண்திறந்தாள். அந்த அறையில் அவளைத் தவிர யாரும் இல்லை. சோம்பல் முறித்தபடியே எழுந்து அமர்ந்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த பெட்டியில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளிக்க வெளியே வந்தாள் அங்கு குபேரன் இருக்கவும்
”அங்கிள்” என அழைக்க அவரோ
”ஓ வாம்மா நல்லா தூங்கினியா”
”நல்லா தூங்கினேன் அங்கிள்”
”சரி சரி போம்மா போய் குளிச்சிட்டு வா, எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்”
”ஓகே அங்கிள் ஆமா ஜானு எங்க அங்கிள்”
“அவளோட வீட்டுக்கு போயிருக்கா”
”அவளோட வீடா ஓஓஓ ஹஸ்பென்ட் வீட்டுக்கா”