(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

இல்லை, நான் அவர் பொண்டாட்டி அவரோட நல்லது கெட்டதுல என் வாழ்க்கையும் அடங்கியிருக்கு, அவரை நான் தடுத்துப் பார்த்தேன் முடியலை, உங்ககிட்ட உதவி கேட்க வந்தா நீங்க அவருக்கு மேல இருக்கீங்களே, இப்படியிருந்தா நாங்க எப்படி சேர்ந்து வாழறது எங்க வாழ்க்கையை பத்தி யாருக்கும் அக்கறையில்லையா” என கோபத்தில் வெடிக்க அதில் அவளது கண்கள் கலங்க அந்த கண்ணீரைக்கண்டதும் கொம்பனின் பெற்றோர்க்கு ஒருமாதிரியாகிப் போனது. அவர்களுக்கும் இப்போது கோபம் வந்தது

  

”அழாதம்மா நாங்களே கொம்பனை தடுத்து நிறுத்தி புத்திமதி சொல்றோம்”

  

”நான் வீட்டுக்கு போறதுக்குள்ள அவர் என் வீட்ல இருக்கனும்” என மிரட்டலாக சொல்லிவிட்டு அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றாள். அவள் சென்றதும் கொம்பனை தேடிக் கொண்டு சென்றார்கள் அவனை பெற்றவர்கள்

  

பிரச்சனைக்குரிய இடத்தில் கொம்பனும் தகராறு செய்தவர்களை அதட்டிப் பார்த்தான் மிரட்டிப் பார்த்தான், அவர்களோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தெனாவெட்டாக பேச பேச அவனுக்கு கோபமே வந்தது, எவ்வளவுதான் அவனும் பொறுமையாக இருப்பான், ஒருகட்டத்தில் அவனின் பொறுமை போய் கோபம் வந்து அடிதடியில் இறங்க எண்ணி வெகுண்டு எழுந்த நேரம் அவனது தாயின் குரல் அவனை நிப்பாட்டியது

  

”கொம்பா அடுத்த அடி எடுத்து வைச்ச என்னை உசுரோடவே பார்க்க முடியாது” என சொல்ல அந்த வார்த்தைகள் அவனை தீயாய் சுட்டது பதறினான்

  

”அம்மா என்னம்மா இப்படி பேசறீங்க ஆமா இங்க எதுக்கும்மா வந்தீங்க” என கேட்க அவனது தந்தையோ

  

”போதும் கொம்பா இதோட இந்த அடிதடியை நிப்பாட்டிக்க கிளம்பு வீட்டுக்கு போ”

  

”அப்பா என்னப்பா பேசறீங்க எனக்கு ஒண்ணும் புரியலை, நீங்க எப்படி இங்க வந்தீங்க நான் இங்க இருக்கற விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.