(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அம்மா நான் சொல்றேன் கிளம்பு உன் பொண்டாட்டி வீடு போய் சேர்றதுக்குள்ள நீ அங்க இருக்கனும் உடனே கிளம்பு”

  

”முடியாதும்மா” என கோபத்தில் வெகுண்டவன் தகராறு செய்தவர்களை அடி அடி என அடித்து விரட்ட அவர்களோ வலியில் அங்கிருந்து ஓடினார்கள்.

  

”பார்த்தீங்களாம்மா பிரச்சனை முடிஞ்சது இனி இவனுங்க வரமாட்டானுங்க அவ்ளோதான் இதுக்கு போய் பயந்துக்கிட்டு”

  

”சொல்ல சொல்ல கேட்காம நீ அடிதடியில இறங்கிட்டல்ல இனி எங்க முகத்தில விழிக்காத”

  

”அப்பா ஏன் இப்படி பேசறீங்க நாலு பேருக்கு நல்லது செய்தா புண்ணியம்பா”

  

”ஒண்ணும் தேவையில்லை இதுவரைக்கும் நீ நிறைய புண்ணியம் சம்பாதிச்சிட்ட சம்பாதிச்ச வரைக்கும் போதும் கிளம்பு வீட்டுக்குப் போ” என அதட்ட

  

”நேத்து வந்தவளுக்காக என்னையே திட்டறீங்களா”

  

”அவளுக்காக இல்லை அவள் உன் நல்லதுக்கு சொன்ன வார்த்தைகளுக்காக மதிச்சி பேசறோம்”

  

”அவளா எனக்கு நல்லது செய்றவ, அவளாலதானே என் வாழ்க்கை கேள்விக்குறியா நிக்குது இப்ப வரைக்கும் அவள் என்னை பழிவாங்கிக்கிட்டே இருக்கா ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்குமான்னு பார்த்து என்னை அவமானப்படுத்தறா என்னை நிம்மதியா சாப்பிட விடமாட்டேங்கறா, தூங்க விடமாட்டேங்கறா பெரிசா பொண்டாட்டி பொண்டாட்டிங்கறாளே பொண்டாட்டிக்கான எந்த ஒரு விசயமாவது அவள் செய்திருப்பாளா, நான் அவளை தொட்டா அவளுக்கு அப்படியே தீசுட்ட மாதிரி இருக்காம், போதுமா அவளுக்கு என்னை பிடிக்கலைம்மா, அவளோட வாழ எனக்கும் பிடிக்கலை, ஏதோ அவளுக்கு நடந்த அநீதிக்கு நானும் ஒரு காரணம்ங்கறதால அவளை கட்டிக்கிட்டேனே தவிர இப்பவரைக்கும்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.