(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அப்படியா அதனால என்னம்மா ஒண்ணும் ஆயிடாது பிரச்சனையை தீர்த்து வைச்சிட்டு வந்துடப்போறான் கவலைப்படாதம்மா” என கொம்பனின் தாய் சொல்ல அவளோ கொதித்துப் போனாள்

  

”நீங்களும் ஒரு தாயா, மகனை இப்படி அடிதடி வேலைக்கு அனுப்பிட்டு எப்படி உங்களால நிம்மதியா இருக்க முடியுது, பிரச்சனையில எவனாவது கொம்பனை தாக்கினா என்னாகிறது, இல்லை பிரச்சனை போலீஸ் கேஸ் வரைக்கும் போனா யார் ஜெயிலுக்கு போவாங்கன்னு நினைக்கறீங்க கொம்பன்தானே”

  

”இதுவரைக்கும் அப்படி ஏதும் நடக்கலைம்மா”

  

”இதுவரைக்கும் நடக்கலை இனி நடந்துட்டா என்ன செய்வீங்க, உங்களால எதுவும் செய்ய முடியாது வேடிக்கைதான் பார்க்க முடியும் பாதிக்கப்படறது நான்தானே”

  

”சே சே அப்படி சொல்லாதம்மா கொம்பன் எங்களுக்கும் புள்ளைதானே அவனுக்கு ஒரு கஷ்டம்னா நாங்க துடிச்சிப் போயிடுவோம்”

  

”அப்படி ஒண்ணும் தெரியலையே, அவர் பிரச்சனையை தீர்க்க போயிட்டாருன்னு சொன்னதும் நீங்க என்ன செய்திருக்கனும் இந்நேரத்துக்கு அவரை தேடிப்போய் நிப்பாட்டியிருக்கனும், அதை விட்டுட்டு என்னை அமைதியாக்கப் பார்க்கறீங்களே இது அநியாயம்”

  

என சொல்ல கொம்பனின் பெற்றோர்கள் கவலையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு காவேரியை பார்த்து

  

”இப்ப எங்களை என்னம்மா செய்ய சொல்ற”

  

”நீங்க வேணா கொம்பன் எப்படி போனா எனக்கென்னன்னு இருந்திருக்கலாம் அவர் ஊருக்கு நல்லது செய்றன்னு பிரச்சனையை முடிக்க அடிதடியில இறங்கினாலும் ஏதோ புண்ணியம் வருதுன்னு அமைதியா இருந்திருக்கலாம், அதுக்காக நான் அப்படி இருக்கனும்னு அவசியம்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.