(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”அப்படியில்லைம்மா ஆடற மாட்டை ஆடி கறக்கனும் பாடற மாட்டை பாடி கறக்கனும் அடிக்க அடிக்கதானேம்மா அம்மியும் நகரும்”

  

”ஏன் அந்த அடியை நீங்க அடிக்க மாட்டீங்களா”

  

”நாங்களா நாங்க எப்படி” என தயங்க

  

”எப்படி கலப்பையும் மண்வெட்டியும் பிடிச்ச கைகள்தானே உங்க கைங்க, உங்களால தகராறு செய்தவங்களை அடிச்சி விரட்ட முடியாதா என்ன, அந்தளவுக்கு பலமும் வீரமும் இல்லையா உங்ககிட்ட”

  

”வீரத்துக்கும் பலத்துக்கும் குறைச்சல் இல்லைம்மா, நாங்க அவனுங்களை அடிச்சி விரட்டுவோம் பதிலுக்கு அவனுங்க எங்க குடும்பத்தை ஏதாவது செய்துட்டா என்ன செய்றது, அந்த பயத்திலதான் கொம்பன்கிட்ட உதவி கேட்க வந்தோம்”

  

”அடடே என்ன ஒரு சுயநலம், நீங்களும் உங்க குடும்பமும் பத்திரமா இருக்கனும், கொம்பனுக்கு ஏதாவது ஆச்சின்னா ஆகட்டும் அப்படித்தானே, ஏன் அவருக்குன்னு குடும்பம் இல்லை பொண்டாட்டியில்லையா இப்பதானே அவருக்கு கல்யாணம் ஆயிருக்கு, அவரை இப்படியாப்பட்ட பிரச்சனையில இறக்கப் பார்க்கறீங்களா நீங்கள்லாம் மனுஷங்களா மனசாட்சியில்லை உங்களுக்கு”

  

என திட்ட அதில் வந்தவர்கள் அரண்டுப் போய் நின்றார்கள். அங்கு நடப்பதை பார்த்தபடி வந்த கொம்பனும் கணக்குப்பிள்ளையும் காவேரியிடம்

  

”ஏம்மா முறைபொண்ணே உனக்கெதுக்கு ஊர்பிரச்சனை அவங்க என்னைத்தானே பார்க்க வந்தாங்க, நீ எதுக்கு அவங்ககிட்ட பேசற போ அப்படி, இது பெரியவங்க விவகாரம் இதுல சின்ன பொண்ணு நீ தலையிடக்கூடாது வீட்டுக்குப் போ”

  

”இதப்பாருங்க நான் உங்க பொண்டாட்டி பிடிச்சோ பிடிக்காமலோ நாம ஒண்ணா சேர்ந்து வாழ்ந்துதான் ஆகனும், ஊர்க்காரங்களுக்கு பிரச்சனை வந்துக்கிட்டேதான் இருக்கும் அதை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.