(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”ஆமா நீங்கள்லாம் இங்க என்ன செய்றீங்க” என கேட்க வந்தவர்களோ கொம்பனின் மனைவி என்ற முறையில் அவளுக்கு கைகூப்பி வணக்கம் வைக்க அவளோ இயந்திரதனமாக வணக்கம் வைத்தாள்

  

”ஆஆ வணக்கம் வணக்கம் எதுக்காக இங்க வந்தீங்க, அப்பாவை பார்க்கனுமா அவர் இப்பலாம் இங்க வர்றதில்லை, வீட்ல ஓய்வெடுக்கறாரு அங்க போய் பாருங்க” என சொல்ல வந்தவர்களில் ஒருவன்

  

”நாங்க கொம்பனை பார்க்க வந்தோம்”

  

”எதுக்காக அவரை பார்க்க வந்தீங்க அவரே உங்களை வரசொன்னாரா”

  

”இல்லை நாங்களாதான் வந்தோம் ஒரு சின்ன பிரச்சனை கொம்பன்கிட்ட சொன்னா அவர் தீர்த்து வைப்பாரு அதான்”

  

”உங்க பிரச்சனையை எதுக்காக அவர்கிட்ட சொல்லனும் நீங்களே அதை தீர்க்க முடியாதா”

  

”எங்களால முடிஞ்ச அளவுக்கு முயற்சி செய்துட்டோம் ஆனா பிரச்சனை தீர்ந்தபாடில்லை அதனாலதான் கொம்பனை பார்க்க வந்தோம்”

  

”அப்படியென்ன பிரச்சனை கொம்பனால மட்டுமே தீர்த்து வைக்க முடியற பிரச்சனை எதுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா”

  

”உங்ககிட்டயா எப்படி”

  

”ஏன் நான் அவர் பொண்டாட்டிதானே நான் தெரிஞ்சிக்க கூடாதா”

  

”தாராளமா தெரிஞ்சிக்கலாம் உங்களுக்கும் கொம்பனுக்கு கொடுக்கற அளவு மதிப்பும் மரியாதையும் இருக்கே”

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.