நொந்துப்போயிட்டேன்”
”என்ன நண்பா இப்படி பேசற”
”இதப்பாரு இது போல பில்டப் பண்ற வேலையே வேணாம், நானும் உன்னை மாதிரி சாதாரணமானவன் போதுமா”
”என்ன சொன்னாலும் நீ எங்களை விட மேலானவன் கொம்பா”
”டேய் போதும்டா”
”சரி வந்தவங்களை என்ன செய்றது அதைச் சொல்லு”
”திருப்பி அனுப்பிடு”
”கொம்பா பாவம்பா பிரச்சனை பெரிசுங்கறதாலதானே உன்னை தேடி இங்க வந்திருக்காங்க அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கற, உன் முறைபொண்ணுக்கு பயந்து உதவி செய்றதை நிப்பாட்டப் போறியா என்னால இதை ஒத்துக்க முடியாது கொம்பா”
”இப்ப என்னை என்ன செய்ய சொல்ற”
”வா என்ன ஏதுன்னு கேட்கலாம் உன்னால முடிஞ்சா உதவி செய் இல்லை உதவி செய்தா பிரச்சனை வரும்ங்கறியா என்கிட்ட விடு எப்படி பிரச்சனையை சரியாக்கறதுன்னு சொல்லிக் கொடு அதுபடி நான் செய்து வைக்கிறேன்”
”அப்படிங்கறியா சரி வா போலாம்” என கொம்பன் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு செல்ல அங்கோ அதற்குள் காவேரி வந்திருந்தாள்.
கொம்பனை தேடி தோப்புக்கு வந்தவள் அங்கு ஊர்க்காரர்கள் சிலர் கவலையாக இருப்பதைக்கண்டு குழம்பி அவர்களிடம் பேச சென்றாள்