(Reading time: 29 - 57 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

நீ செய்ற கொடுமையை தாங்கிக்கிட்டு இருக்காரு பாவம் மாப்பிள்ளை அவரை விட்டுடும்மா” என கெஞ்ச அவளோ பலமாக யோசித்தபடியே கொம்பனைக்காணச் சென்றாள்.

  

கொம்பனோ மாந்தோப்பில் பம்புசெட்டு தண்ணீரை பாய்ச்சிக் கொண்டிருக்க அவ்விடம் ஊர்க்காரர்கள் சிலர் வந்தார்கள். அவர்கள் வரவும் கணக்குபிள்ளை அவசரமாக கொம்பனிடம் வந்தான்

  

”கொம்பா ஊர்க்காரங்க சில பேரு உன்னை தேடி இங்கயே வந்திருக்காங்க ஏதோ பிரச்சனை போல வாப்பா என்ன ஏதுன்னு கேட்கலாம்” என சொல்ல அவனோ

  

”இருடா தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கேன்ல இதை முடிச்சிட்டு வரேன்”

  

”என்ன கொம்பா ரொம்ப மாறிட்ட முன்னெல்லாம் ஊருக்கு ஒரு பிரச்சனைன்னா முதல் ஆளா முன்ன போய் நிப்ப இப்ப ஊரே வந்திருக்கு இவ்ளோ மெத்தனமா இருக்கியே”

  

”அடப்போடா இந்த ஊர்க்காரங்களுக்கு உதவி செய்யப் போய் என் வாழ்க்கை அந்த அடங்காபிடாரி கையால சீரழியறதை பார்க்கறல்ல, அதைப் பார்த்துமா இப்படி பேசற இப்பலாம் எனக்கு ஊர்க்காரங்களை நினைச்சாலே பயமாயிருக்கு”

  

”ஏன்”

  

“அவளை கூட்டிக்கிட்டு கெத்து காட்டலாம்னு ஊருக்குள்ள நடந்துப் போனா பார்க்கறவங்க பேசின பேச்சில என் மண்டை காஞ்சிடுச்சி, அதுல அவள் கோபத்தில என்ன எப்படியெல்லாம் பாழிவாங்கப் போறாளோங்கற பயத்தில ராவெல்லாம் உறக்கம் இல்லாம கிடந்தேன், இப்ப மட்டும் நான் ஊர்க்காரங்களுக்கு உதவி செய்ற விசயம் தெரிஞ்சது என்னை என்ன செய்வாள்ன்னே தெரியலை பயமாயிருக்கு”

  

”கொம்பா நீயா இப்படி பேசறது பயத்துக்கே பயம் காட்டறவன் நீ”

  

”போதும்டா இப்படி என்னை வைச்சி பில்டப் பண்ணி பேசி பேசியே நான்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.