வாழற வழியைப் பாரு, கூடிய சீக்கிரம் அவளை கூட்டிக்கிட்டு நீ நம்ம வீட்டுக்கு முறையா வரனும், எங்களை ரொம்ப நாள் காக்க வைக்காத கிளம்பு” என விரட்ட அதற்கு மேல் அவன் அங்கு நிற்கவில்லை, விறுவிறுவென காவேரியின் வீடு நோக்கி சென்றான், கூடவே கணக்குப்பிள்ளையும் சென்றான்.
இருவரும் காவேரியின் வீட்டிற்குள் நுழைய அங்கு அவளும் அவளது தந்தையும் கவலையுடன் இருந்தார்கள். கொம்பன் வரவும் காவேரிக்கு உயிரே வந்தது ஓடிச் சென்று அவன் முன் நின்று
”உனக்கு ஒண்ணும் ஆகலையே” என அக்கறையாக விசாரிக்க அவனோ கோபத்தில் பொங்கினான்
”அறிவிருக்கா உனக்கு, உன்னை யாரு என் அப்பா அம்மா வீட்டுக்கு போய் என்னை பத்தி போட்டுக் கொடுக்க சொன்னது, அவங்க என்னை தேடி வந்து எப்படி திட்டினாங்க தெரியுமா எனக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சி” என திட்ட அவளோ சட்டென மாறினாள்
”ஓ கஷ்டமா இருக்கா அவங்க திட்டினது இருக்கட்டும், நீ என்னை பத்தி என்னென்ன சொன்னங்கறது எனக்கு தகவல் வந்துடுச்சி அது தெரியுமா உனக்கு” என கோபமாக பேச அரண்டான் கொம்பன்
”அது வந்து”
”நீயெல்லாம் ஒரு ஆம்பளை பத்து ஆளுங்க முன்னாடி கட்டின பொண்டாட்டியை விட்டுக் கொடுத்து பேசிட்டு எப்படி தைரியமா என் முன்னாடி வந்து நிக்க முடியுது உன்னால சே”
”அப்பா அம்மா திட்டவும் கோபத்தில என்னையும் அறியாம”
”அதுக்குன்னு கண்டதெல்லாம் பேசுவியோ“
”நான் உண்மையதான் பேசினேன்”