Page 18 of 26
இவ்விருவரும் எவ்வித சேதாரமும் இன்றி வருவதைக்கண்டபின்புதான் அவர்கள் நிம்மதியானார்கள்.
”இங்க என்ன வேடிக்கை உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையில்லை போங்க இங்கிருந்து” என காவேரி விரட்ட அவர்கள் பதறிக் கொண்டு சென்றார்கள்.
கொம்பனோ சத்தமில்லாமல் வெளியே செல்ல முயல காவேரி தடுத்தாள்
”எங்க போற”
”மாந்தோப்புக்கு”
”எதுக்கு”
”தண்ணி பாய்ச்சலாம்னு”
”சாப்பிட்டியா“
”இன்னும் இல்லை”
”வா வந்து சாப்பிடு”
”இல்லை பரவாயில்லை”
”உன்னை வான்னு சொன்னேன் வான்னா வரனும் புரியுதா இல்லையா” என கத்த அதில் அவன் அமைதியாக பொம்மை போல நடந்து வந்து சாப்பிடும் இடத்தில் அமர அவளே சாப்பாடு எல்லாம் கொண்டு வந்து வைத்து அவனுக்கு பரிமாறினாள்.
அவனுக்கும் பசி இன்று ஏகப்பட்ட பிரச்சனை நடந்தபடியால் அவன் கடகடவென சாப்பிட