Page 22 of 26
”பின்ன வேற எப்படி உன்னை கூப்பிடறது”
”ஏன் எனக்குன்னு பேரே இல்லையா என்ன”
”ஆமாம்ல உன் பேர்தான் என்ன”
”ஏன் அண்ணா உங்களுக்கு என் பேர் தெரியாதா”
“கொம்பனோட முறைப்பொண்ணுன்னு தெரியும் மத்தபடி உன் பேர் எனக்குத் தெரியாதே”
”என் பேரு காவேரி”
”நல்ல பேரு”
”ஆமா உங்களுக்கு மட்டும்தான் தெரியாதா இல்லை கொம்பனுக்கும் என் பேரு தெரியாதா”
”எனக்கே தெரியாதுங்கறேன் கொம்பனுக்கு மட்டும் எப்படி தெரியும்”
”பின்ன அவரு என்னை பத்தி எப்படி பேசுவாரு”
”வேற எப்படி என் முறைபொண்ணு என் முறைபொண்ணுன்னு சொல்வாரு”
”பொண்டாட்டின்னு சொல்ல மாட்டாரா அண்ணா”
”ம் சொல்வாரே கோபத்தில இருக்கறப்ப அப்படி சொல்வாரு”
”ஓஹோ அப்படியா”
”நான் ஒண்ணு சொன்னா கோச்சிக்க மாட்டியே“