”சொல்லுங்கண்ணா”
”கொம்பன் நல்லவன்மா பாசக்காரன், அவனைப் போல ஒருத்தனை எங்க தேடினாலும் கிடைக்க மாட்டான், தன்னை நம்பி வந்தவங்களுக்காக உசுரையே தருவான் அவனை பழிவாங்காதம்மா, அவனோட வாழப்பாரு உனக்கு சிறப்பான வாழ்க்கையை அவன் தருவான்”
”அண்ணா சில விசயங்கள் யார் சொன்னாலும் மாறாது, எனக்குள்ள பல விசயங்கள் ரணமா பதிஞ்சிருக்கு, என்னோட காயம் ஆறனும் அதுக்கு மருந்து அவர்தானே அவரை நான் கஷ்டப்படுத்தி பார்க்கறப்ப எனக்கு நடந்த அவமானங்கள் மெதுவா மறையுது”
”புரியுதும்மா ஊர்க்காரங்க செய்த தப்புக்கு கொம்பனை தண்டிக்கறது எந்தளவுக்கு நியாயம்னு எனக்குத் தெரியலைம்மா”
”நியாயம் அநியாயம் பேசற இடத்தில நான் இல்லை அண்ணா, அவரை பார்க்கறப்ப எனக்கு என்ன தோணுதோ அதை அப்படியே செய்றேன், அது கடைசியில சண்டையில போய் முடியுது, அதுக்கு என்ன செய்ய முடியும் அண்ணா”
”ஒண்ணு சொல்லவா நீன்னா கொம்பனுக்கு ரொம்ப பிடிக்கும்”
”எதை வைச்சி சொல்றீங்க அண்ணா”
”கொம்பனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும் அவன்கூடவே இருந்தவனாச்சே, நீ என்னதான் கொம்பனை கஷ்டபடுத்தினாலும் அவன் உன் பேச்சை கேட்டு நடக்கறான், உன்னை பார்க்கறப்ப அவன் மனசு இறங்கறான், இப்பல்லாம் சந்நியாசி ஆகனும்னோ பக்தி கோயில்னோ பேசறதில்லை, வார்த்தைக்கு வார்த்தை உன்னைபத்திதான் பேசறான் தெரியுமா”
”என்னை பத்தி பேசறாரா இருக்காதே திட்டியிருப்பாரு அண்ணா”