”சரி உன்னை நான் எப்படி கூப்பிடறது”
”இதென்ன கேள்வி எல்லாரையும் போல கணக்குபிள்ளைன்னே கூப்பிடு”
”வேணாம் அது என்னமோ போல இருக்கு நான் வேணா உன்னை அண்ணான்னு கூப்பிடவா” என கேட்க அவன் சட்டென கண்கள் கலங்கிவிட்டான்
”என்னாச்சி நான் பேசினது தப்புன்னா மன்னிச்சிடு”
”அப்படியில்லை எனக்குன்னு எந்த உறவும் இல்லை, கொம்பன் மட்டும் எனக்கு உயிர் நண்பனா இருந்தான், அவனோட குடும்பத்தை என் குடும்பமா பார்த்தேன், என் அப்பா அம்மா இறந்தபின்னாடி முழுக்க முழுக்க நான் கொம்பனோடவே இருந்துட்டேன், அவனோட நிழலை போல நான் இருப்பேன், எனக்கும் உறவுக்காரங்க இருக்காங்க ஆனா யாரும் என்னை மதிக்கமாட்டாங்க, எனக்குன்னு ஏதாவது உறவு இருக்காதான்னு ஆசைப்படுவேன், அந்த பாக்கியம் எனக்கு கிடைக்கலை
நீ என்னை அண்ணான்னு சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாயிடுச்சி, தங்கச்சிங்கற உறவை விட பெரிய உறவு எனக்கு வேற என்ன வேணும் சொல்லு” என சொல்லியபடியே தனது கண்ணீரை துடைக்க அவளோ
”ஓ அப்போ இது ஆனந்தகண்ணீரா“
”ஆமாம்”
”அண்ணா” என பாசமாக அழைக்க அவனோ சிரிப்புடன்
”சொல்லும்மா தங்கச்சி“
“தங்கச்சியா“